PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, October 31, 2011

பொம்பள மனசு (வம்சி சிறுகதைப் போட்டி-2011)




படம் உரியவருக்கு நன்றி....

ங்க இந்த பீரோவுல வெச்சிருந்த வளையலும் மோதிரத்தையும் பார்த்தீங்களா ?”-என்று ஜானகி கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
       “ஏன் காணாம போச்சா?”-என்று கேட்டேன்.  இப்படித்தான் எதையாவது எங்காவது வைத்துவிட்டு வீட்டையே இரண்டு படுத்தி விடுவாள்.
       கடந்த ஒரு வாரமாக என்னுடைய அக்கா தனது இரண்டு பெண்களுடன் வந்து தங்கியிருந்தாள்.
இப்போதான் கொஞ்ச நேரம் முன்பு அவள் தன பிறந்த வீடு விஜயத்தை முடித்துவிட்டு கிளம்பிப்போயிருந்தாள்.
       இன்று காலை ஜானகியின் தங்கை சுசீலாவையும்  தனது இரண்டு வாண்டுகளோடு ஈரோடு பஸ் ஏற்றிவிட்டு வந்திருந்தேன்.   கடந்த வாரம் முழுவதும் ஒரே கலவர வாரம்தான். எனது இரண்டு மகன்களும் இன்று காலையிலிருந்து எதையோ பறிகொடுத்தது போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட ஆள் இல்லாமல் டி.வி.யை நோண்டியபடி சுவராஸ்யமில்லாமல் இருக்கிறார்கள்.
       இப்போதுதான் ‘காணவில்லை’ பிரச்சினை பரபரப்பை பற்றிவிட்டது.
       “எங்கயாவது கை மறதியா வெச்சிருப்பே....  நல்லா தேடித் பாரு.”- என்று அதட்டினேன்.
       “இல்லீங்க இங்கதான் வெச்சேன்..... காலையில கூட பார்த்தேனே...”
       அவள் உறுதியாக சொன்னபோது நிஜமாகவே அதிர்ந்தேன். நானும் அவளோடு சேர்ந்து பீரோவில் உள்ளதை  வெளியே இழுத்துப்போட்டு தேடினேன்.  ஆனால் அந்த வளையலும் மோதிரமும் மட்டும் அகப்படவேயில்லை. வேறு எங்காவது வைதிருக்க்கலாமென்று அலமாரி,ஜன்னல், டி பாய், ட்ரெஸ்ஸிங் டேபிள் என்று இரண்டு மணி நேரம் வீடு இரண்டு பட்டது. ஆனால் தேடியது மட்டும் கிடைக்கவில்லை.
       சில நேரங்களில் காணாமல் போவது பாத்ரூமில் கிடைக்கும். குளிக்கும்போது கழற்றி வைத்துவிட்டு வீடெல்லாம் தேடுவாள். அங்கும் இல்லை என்றதும் ஜானகி ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் முகத்தை பார்த்தாள்....
       நான்,”இத பாரு  நல்லா தேடிப் பார்த்துட்டு எதா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வா..”-என்றேன்.  ராமனைப் பார்த்து சீதை சந்தேகப் படுவதாவது....
       “எனக்கென்னவோ இதை யாரோ திருடிட்டு போன மாதிரித்தான் தெரியுது. காலைல நான் பீரோவை திறந்தபோது இருந்தது...  ரெண்டு மணி நேரத்தில யாரு திருடியிருக்கப் போறா....?”
       முதல் கட்ட விசாரணை  தொடங்கினாள்......  பசங்க கொஞ்சம் சுவாரஸ்யம் வந்தவர்களாய் டி. வி –யை அணைத்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
       நான் கற்ப்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாய் மன்றாடி என் மீதிருந்த சந்தேக நிழலைப் போக்கினேன். 
       அடுத்த அம்பு அக்காவின் மேல் பாய்ந்தது...
       “காலையில் அடிக்கடி பேட்ரூமுக்குள்ள உங்க அக்கா வந்துட்டு போயிட்டு இருந்தாங்க....”
       எனது ஒரே ரத்தம் (சேம் ப்ளட்) என்னை அறியாமலே கொதித்து எழுந்தது..  தானாட விட்டாலும் தன் சதை, எலும்பு, நரம்பு எல்லாம் ஆடுமல்லவா?  ஆடியது...
       அக்காவுக்கு கஷ்ட ஜீவன்ம்தான், புருசன் ஒரு தண்ணி மாஸ்டர்தான். பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டர் வேலை.  நல்ல வருமானம்.. இருந்தபோதிலும் முக்கால்வாசி டாஸ்மாக் எனும் முதல் மனைவிக்கே போனது போக மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே வீடு வந்து சேரும். அக்காதான் சுயமாக மாவு ஆட்டி திருப்பூர் அவசரத்தை பயன்படுத்தி விற்று தனது இரண்டு பெண்களையும் படிக்கவைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். பெரியவள் பிளஸ் டூ போகிறாள்.  சின்னவள் ஒன்பதாவது போகிறாள்.என்னதான் வறுமை இருந்தாலும் திருடும் அளவுக்கு போகிற குணம் இருப்பவளில்லை. எனவே எனது கோபம் எகிறியது.
       “வார்த்தைய சிந்தினா அள்ள முடியாது.. பல்லு மேல நாக்க போட்டு பேசாத....”  - பதட்டத்தில் வாய் குழறியது...  என் குடும்பத்தின் மீது மாபெரும் கறை விழுந்து விடாமல் இருக்க மகாபாரதப் போரே நடத்த வேண்டி இருக்கும் போலிருந்தது.
       “ நாங்கெல்லாம் அப்படி வளர்க்கப்படலை.....எங்கம்மா சோத்துக்கு இல்லாட்டியும் திருடக்கூடாது அப்படின்னு சொல்லித்தான் வளர்த்தாங்க...”
       கடந்த கால வரலாறுகளை சாண்டில்யன் கணக்காக சொல்ல வேண்டியிருந்தது.
       “ஒரு வார்த்தை சொன்னதுக்காக ஏன் டிங்கு டிங்குனு ஆடறீங்க....”
       மீண்டும் தூங்கிட்டிருந்த என் தன்மானத்தை தட்டி அல்ல உதைத்து எழுப்பினாள்.... நான் நிலை குலைந்து ஒருமாதிரி எழுந்து நின்று எனது அம்பை விட்டேன்.
       “எதுக்கும் உன் தங்கச்சி சுசிலாவை கேட்டுப்பாரேன், கை மறதியா எடுத்திருக்கலாமில்ல....
                        அவ்வளவுதான் ஜானகி – பத்ரகாளி அவதாரம் எடுத்து ஒரு ஆட்டம் ஆடினாளே பார்க்கனும். மானாட மயிலாட கலாக்கா மட்டும் பார்த்திருந்தால் பத்துக்கு பத்து மார்க் போட்டிருப்பார்கள்.
       “ம்ம்ம் ....என் குடும்பத்தைப் பற்றி தப்பா சொல்லிட்டிங்களா?  எங்க அப்பா கேட்டிருக்கனும் இதை.. நாண்டுகிட்டு செய்திருப்பார்... “”
       “அம்மா விடுங்கம்மா... அப்பா கை மறதியா எடுத்திருக்கலாமில்லன்னுதானே சொன்னாரு...”-என்று பெரியவன் வெள்ளை கொடி ஏந்தி சமாதானம் பேச வந்தான்.  
       நான் எரியும் தீயில் எண்ணை விடுவது போல மேலும்....
       “பையனுக்கு ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேணும்னு கேட்டா, நான்தான் இப்ப இல்லை-னு சொல்லிட்டேன்... அந்த கோபத்துல ஏதாவது எடுத்துட்டு போயிட்டாளோ என்னவோ? ”-என்றேன்.
       கேட்டதும் முகமெல்லாம் சிவந்தன... நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல உதடுகள் துடித்தன....ஒரு முடிவுக்கு வந்தவளாய்...
       “ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னா அவ புருசனைக் கேட்க வேண்டியதுதானே ... ஏன் என் புருசனைக் கேக்கணும்? என் போன் எங்கடா... எடு அதை.....”-என்றாள்....
 எதையுமே சிரமப்பட்டு தேடியும் எடுக்காத சின்னவன் ஓடிப்போய் தேடாமலே செல் போனை எடுத்து டயல் செய்து, ஸ்பீக்கரையும்  ஆன் செய்து கொடுத்தான்.  அவனது “குறிப்பறிந்து நடக்கும்” குணத்தை நினைத்து புல்லரித்தது.  எதையும் ஊதி பெரிசாக்குவதில் எங்க குடும்பத்தில் ஆர்வம அதிகம்.
       சுசீலா தன் பயண விபரத்தைதான் விசாரிக்கிறாள் என்று நினைத்தபடி-“ அக்கா சொல்லுக்கா.. இப்பதான் பஸ் ஈரோடு பஸ்ஸ்டான்ட் வந்து சேர்ந்திருக்கு...ரொம்ப ஸ்லோவா ஒட்டறாங்க... ” என்றாள்.
       “நல்லா ஒட்டுனாங்க போ... ஏண்டி பணம் வேணும்னா எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே...எதுக்கு பீரோவுல ......”
       அவள் பேசி முடிக்குமுன் நான் போனை பிடுங்கி அணைத்தேன்.
       ‘ஏன் இப்படி சீன் போடறே... நல்ல தேடி பார்த்துட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வா.... எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவுபண்ணாத ......”-  விடாமல் மேலும் ....
       “எங்க அக்காவெல்லாம் எடுத்திருக்க மாட்டா... திருட்டு புத்தி எல்லாம் அவளுக்கு கெடையாது. எதா இருந்தாலும் கேட்டு வாங்கிக்குவா. இல்லைன்னாலும் கோச்சுக்கமாட்டா. என்ன வறுமைதான்... புருசன் சரியில்லைதான்... அதுக்காக திருடற அளவுக்கெல்லாம் இறங்கமாட்டா..” “ என்று உறுதியோடு சொன்னேன்.
       “பின்ன... சுசீலா மட்டும் எடுத்திருப்பாளா என்ன? அவளும் நல்லாதானே இருந்தா... புருசன் தொழில் கடன் ஆகிப்போச்சு... என்ன பண்ணுவா... அதுக்காக அவளைப் போயி திருடின்னு சொல்லிட்டீங்களே...”
       ஜானகி புலம்பல் ஆரம்பித்தது... இனி இது எப்போது நிற்கும் என்று வானிலை நிலவரம் எல்லாம்  சொல்ல முடியாது. ஆனால் ஒரு வாரத்துக்கு இதே புலம்பலாக இருந்தது. அந்த மோதிரமும் கிடைக்கவில்லை... வளையலும் கிடைக்கவில்லை. அவளது புலம்பலும் நின்றபாடில்லை. அவள் சாப்பாடு போடும்போதும், காப்பி டம்ளரை வைக்கும்போதும், ‘ணங்’-என்பதில்  அது நன்றாகவே தெரிந்தது.

       டுத்த வாரத்தில் ஒருநாள் நான் ஆபீஸ்-ல் இருந்தபோது ஜானகியிடமிருந்து போன்.
       “எங்க நான் உங்க அக்கா வீட்லயிருந்து பேசறேன் ..” –என்றாள்.  எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
       “எப்ப போனே... எதுக்கு போனே...?”
       “எங்க சித்தப்பா வந்திருந்தாரு.. பையனுக்கு கல்யாணமாம். பத்திரிக்கை வச்சாங்க.  அப்புறம் அக்காவுக்கும் வைக்கனும் வா, அட்ரெஸ் தெரியதுன்னாங்க. அதன் நானும் கூட வந்தேன்..இப்ப அக்கா வீட்லதான் இருக்கேன்....”-என்றவள் அடுத்து சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...மெலிசான குரலில் “ஏங்க.. அன்னிக்கு காணாம போன வளையல் உங்க அக்கா கையில போட்டிருக்கா...”-என்றாள்.
       ஜானகி சொன்னதும் எனக்கு திக்கென்று இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.
       “நல்லா பாரு... அது உன்னோடதுதானா.....?”
       “அது என்னோடதேதானுங்க... லேசா வளைஞ்சு நெளிஞ்சு இருக்கும்..இத்தனை நாளா போட்டிருந்த எனக்கு தெரியாதா?”
       உறுதியாய் இருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  என் நம்பிக்கையின் மீது இது பேரிடியாய் இருந்தது.
       “சரி நான் வெச்சிடரனுங்க... வீட்டுக்கு வாங்க பேசிக்கிடலாம்....”
       ஆபீஸ் முடியும் வரை மனசு சரியில்லாமலே இருந்தது. ஜானகி வேறு ஏதாவது குதர்க்கமாய் பேசி பிரச்சினை பண்ணிவிடுவாளோ என்று பயமாய் இருந்தது.  என்ன இருந்தாலும் அக்கா  இப்படி செய்யக்கூடாது, என்னிடம் கேட்டிருந்தால் எதுவும் செய்திருக்கலாமே என்று தோன்றியது.
       சுசீலாவின் மேல் சந்தேகப்பட்டது எவ்வளவு தவறு.  ரெண்டு பையன்களை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாள். 
சுசீலாவின்  பெயருக்கு ரூபாய் ரெண்டாயிரம் மணி ஆர்டர் பண்ணிவிட்டு நேரே வீட்டுக்கு போனேன்.
       ஜானகி எல்லா வேலையையும் முடித்துவிட்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.  அவள் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.  அவள் உள்ளே எழுந்து சென்று டீ போட்டு வந்தாள்.  சிறிது நேரம் கழித்து மௌனத்தை உடைக்கும் விதமாக...
       “ஏங்க.... அக்காதான் மோதிரமும் வளையலும் எடுத்திருக்கு.  கைல போட்டிருந்துச்சு... ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துச்சு.. கைய கைய முந்தானைக்குள்ள மறைச்சு வெச்சுகிச்சு....”
       “நீ என்ன பண்ணினே..?”
       “நான் ஒன்னும் கேக்கலை... “
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...
“ஏண்டி ஒண்ணும் கேட்கலை..?”
“ஏங்க.. அது வெறும் கவரிங் நகைதான்....போனா போயிட்டு போகுது விடுங்க....    
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருந்தது.....
“அடிப்பாவி.. இதுக்குதான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுனியா...?”
“அக்காவ பார்த்ததும் மனசுக்கு சங்கடமா போயிட்டுது.. பெரியவ வேலைக்கு போறாளாம்..ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லைன்னு சொல்லி பனியன் கம்பெனிக்கு அனுப்பீட்டாங்களாம்....நானும் பணம் ஒண்ணும் கொண்டு போகலை.. கைல இருந்த வளையல கழட்டி கொடுத்துட்டு வந்தேன்.. முதல்ல புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.  ஏங்க நான் பண்ணுனது தப்புங்களா?..” அவள் சாவகாசமாய் கேட்டபோது... நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை......



Sunday, October 30, 2011

ரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)


து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி-2011- க்காக  எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்லோரும் ஜெ.வுக்கு குத்தின மாதிரி எனக்கும் கொஞ்சம் குத்திட்டு போங்க... பிடிக்கலைன்னா ஆட்டோ அனுப்பிவிடுங்க, வரேன்.  நேர்ல வச்சு கைப்புள்ளைய கவனிச்ச மாதிரி கவனிச்சி விடுங்க...இதல்லாம் நமக்கு புதுசா அப்பு.



ங்கு,விஷ்ணு,சாமி,வில்லி எனப்படும் வில்லயம்ஸ் நால்வரும் திருப்பரங்குன்றத்தை நோக்கி அவர்களுக்கு நேரப் போகும் அபாயத்தைப் பற்றி சிறிதும் அறியாமல் கேலியும்-கிண்டலுமாக, தண்ணியும்-மப்புமாக காரில் போய்க் கொண்டிருந்தனர்.

 இவர்கள்...மதுரையில் அரசரடியில்  உள்ள அர்னால்ட் ஜிம் க்ளப்-ல் தினசரி தங்களது உடம்பை கொஞ்சம்....கொஞ்சமாக இறுக்கி பழனிமலைப் படிகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர்.   ரங்கு ஐந்து, சாமி ஆறு படிகளையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  வில்லியோ இதிலென்ன வஞ்சனை என்று பத்துப் படிகளுக்கு முயற்சிசெய்து கொண்டிருக்கிறான்.

மாஸ்டர்,  தண்ணீர் கூட அளந்துதான் குடிக்கவேண்டும் என்றதால் பாரில் இருக்கும்போது சின்சியராக அளந்தூ அளந்தூதான்  குடிப்பார்கள். 

விஷ்ணுவுக்கோ இந்த பேராசை எல்லாம் கிடையாது.  இருக்கின்ற ஒரே தொந்தியை எப்படியாவது குறைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறான்ஆனால் எத்தனை அடி அடித்தாலும் அந்த இமயமலை கொஞ்சம் கூட அசையமாட்டேன் என்கிறது.

காலையில் ஜிம், பகலில் நகர்வலம், மாலையில் மீனாட்சிஅம்மன் கொவிலில் ஃபிகராபிஷேக பூஜை, இரவு பாரில் ஜலக்ரீடைஇப்படிப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

 இவர்களுக்கு காவல் துறையில் சேர்ந்து நாட்டுக்காக டீ....ஸாரி.....கடமை ஆற்ற வெண்டும் என்பதே வாழ்க்கை லட்சியம்.

இதில் ரங்கு...அவனது முழுப்பெயர் கோகுலரங்கனாதன்ரங்கனாதன் என்பது அவனின் அப்பா அவரது அப்பாவை மறக்காமல் இருப்பதற்காக வைத்த பெயர்ஆனால் வைத்ததோடு மறந்துவிட்டது வேறு விசயம்அவனை கோகுல் என்றுதான் அழைக்கிறார்கள்ஆனால் நண்பர்கள் வட்டத்தில் மறக்காமல் ரங்கூ...என்றுதான் ஆசையாக(?) அழைக்கிறார்கள்இது அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. தன்னை எஸ்.பி.கோகுல் என்று அழைக்கவே சொல்லுவான். அப்போதுதான் தன்னுடைய லட்சியம் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதியும் என்பான். விஷ்ணுவோ அதென்ன மரம்......இதுவரை நான் பார்த்ததில்லையே என்பான்.  

விஷ்ணுவுக்கோ தமக்கு தொந்தி இடிப்பதால், 'நீங்கெல்லாம் போலீஸ் ஆகிக்கங்கெடாநான் உங்களுக்கு இன்ஃபார்மர் ஆகிடறேன்'-என்பான்.   எல்லோரும் அவனைஇன்ஃபார்மர் விஷ்ணு என்றே அழைத்தார்கள் இதற்காக அவ்வப்போது  'நீ மட்டும் இல்லையென்றால் நான் ஐ.ஜிஆகிவிடுவேன்'-என்று தொந்தியோடு பேரம் பேசுவான்.   ஆனால் தொந்தியோ இதுக்கெல்லாம் மசியாது  நாளொரு கொழுப்பும் பொழுதொரு மடிப்புமாக வளர்ந்துகொண்டுதானிருந்ததுதொந்தியைக் குறைக்க அவனும் அவனது மாஸ்டரும்-மாஸ்டர் ப்ளான் போட்டார்கள்ப்ளானின் ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினை.  முதலில் பீரை தள்ளி வைக்கச் சொன்னார்ஆனால் அவனால் மாஸ்டரை மட்டுமே தள்ளி வைக்க முடிந்ததுஇவனை விட்டால் ஜிம்முக்கு வருமானம் போய்விடுமே என்று மாஸ்டரும்-‘மாஸ்டர் ப்ளானைத் தள்ளி வைத்தார்.

சாமிகூட சொல்வான்டேஉன்னோட தொந்திக்கு பேசாம நீ போலீஸ் ஏட்டாகிடு”-என்று.   ஆனால் விஷ்ணுவுக்கு அதில் கொஞ்சம் கூட  சம்மதமில்லை'ஆனால் ஐ.ஜிஇல்லையெனில் இன்ஃபார்மரே ' போதும்.

சாமிக்கு எஸ்.ஆனால் போதும்லஞ்சம் வாங்காமல் நேர்ர்ர்ர்ர்ர்மையான எஸ்.ஐ என்று பேர் வாங்கவேண்டும்அப்புறம் அப்படியே ப்ரொமோசனில் ஒவ்வொரு படியாக மேலே வந்துவிடவேண்டும்சாமி திரைப்படம்  த்ரிஷா மாதிரி எதாவது காலேஜ் பொண்ணை கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வில்லன்களை துரத்தி துரத்தி அரிவாளால் (மதுரையாச்சே...) வெட்டவேண்டும். அதற்காகவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பீரில் முகம் கழுவி ப்ராக்டீஸ் செய்து கொள்வான். அவ்வப்போது வில்லன்களிடம் தொடையைத் தட்டி சவால் போடவேண்டி இருக்கும் என்பதால் மாஸ்டரிடம் சொல்லி தொடைக்கு தனியாக எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கிறான்எஸ்.எஸ்.ம்யூசிக் சானலில் பூஜாவிடம் ஃபோன் பண்ணும்போதெல்லாம்கல்யாணம்தான் கட்டீக்கிட்டு ஓடிப்போலாமா-பாட்டையே கேட்பான்இதனால் அந்த சானலில் இவனது நம்பரையும், பாட்டையும் ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள் 

வில்லியம்ஸ்-ஒரு காக்க..காக்க சூர்யா மாதிரி என்கவுன்டர் போலீஸ் ஆகவேண்டும் என்பதே அவனது ஆசைஅந்தப் படம் பார்த்ததிலிருந்து மதுரையில் இருக்கும் ரவுடிகள் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறான்.  இன்னும் முழுமை பெறவில்லை.  இங்குதான் தினம் ஒரு ரவுடி பிறந்து வளர்கிறானே.  எவனைக் கேட்டாலும் ஆம்வே ஏஜன்ட் மாதிரி நானே ஒரு ரவுடிதானே என்கிறார்கள்.   C.S.I ஸ்கூல் முன்னாடி நின்று நளினி மிஸ்ஸுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறான்ஆனால் அவளோ இவனை ஒரு மனுசனாகக்கூட வேண்டாம் ஒரு குப்பைத்தொட்டியாகக் கூட மதிக்க மாட்டேன் என்கிறாள்.

ப்போது இவர்கள் போய்க் கொண்டிருப்பது திருப்பரங்குன்றத்திற்குத்தான்தினமும் மீனாட்சி ஆத்தாவையே பார்த்து பார்த்து புளித்துப்போனதால் ஒரு மாற்றத்திற்காக முருகப்பெருமானை(?) காண வந்திருந்தார்கள்

காரை அடிவாரத்தில் பார்க் செய்துவிட்டு நால்வரும் மெதுவாக படியேறினார்கள்.  ரங்குவுக்கு வயிற்றுக்குள் போயிருந்த வ-பிராந்தி அதாங்க குவாட்டர் பிராந்தி தனது கடமையை செய்து கொண்டிருந்தது. காலைப் பின்னி...பின்னி ஃபேசன்டிவி பெண்கள் போல பூனைநடை நடந்தான் 

வில்லியோ தெருநாய் நடப்பது மாதிரி நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்தான்கொஞ்ச நேரத்தில் படிகளிலேயே குப்புறப்படுத்துவிட்டான்விஷ்ணு அவனை எழுப்பி எழுப்பிப் பார்த்தான். அவன் அசைவதாகத் தெரியவில்லை. அவனின் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வைத்துவிட்டு நெற்றியில் திருநீரைப் பூசிவிட்டான்அசலில் பார்ப்பதற்கு பக்திபரவசத்தில் குப்புறவிழுந்து முருகனை சேவிப்பது போலிருந்ததுவில்லியம்ஸ் எனும் சுத்த கிருஸ்துவனை டாஸ்மாக்  எனும் மந்திரம்  சுத்த சீனிவாசராமானுஜம் ஆக்கியிருந்தது. 

சாமியும் ரங்குவும் அங்கிருந்த குரங்குகளோடு பேசிக்கொண்டிருந்தனர்.  அவைகள் இவர்களிடம் குடிக்க-கடிக்க ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்தன.  சாமி குரங்குக்கு தன்னால் இதுதான் தரமுடியும் என்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். குவாட்டருக்கே தாங்காதவனெல்லாமா நமது எதிரியா-என  அவை அவனை ஒரு குரங்காகக்கூட மதிக்கவில்லைபின்னே மனுசனுக்குத்தான்-மனுசன்-என்கிற மரியாதைகுரங்குகளுக்கு-குரங்கு-என்றால்தான் நல்லமரியாதை

நாலைந்து குரங்குகள் ரங்குவின் கையிலிருந்த சைட்-டிஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்காக அவனை ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தன. விட்டால் அந்தக் குரங்குகள் மெயின் டிஸ்ஸே கேட்கும் போலிருந்தது.   
அவனும் குரங்குகளுக்கு நல்ல கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்தான்

டே..சாமி இதுகதாய்ண்டா..நமக்கெல்லாம் தாத்தாடாஇதுகளுக்கு நாம ஏதாவது செய்திருக்கோமாடா…? நாம நன்றி கெட்ட நாய்ங்கடாஇல்லல்லநன்றி கெட்ட குரங்குடா.  ஏதாவது செய்யணும்டா…..-என்று அவனும் ப்ளாஸ்டிக் டம்ளர் ஒன்றை  பாறை மீது வைத்து இடுப்பிலிருந்த ஒல்ட்மன்க்-லிருந்து கொஞ்சமாக ஊற்றினான்ஒரு பெரிய கருங்குரங்கு மற்ற குரங்குகளை தள்ளி விட்டுக் கொண்டு முன்னால்வந்து ரங்குவைப் பார்த்து ஃப்ளைட்டிலிருந்து இறங்கிய தல போல தலையை லெஃப்ட்டும் ரைட்டும் ஸ்டைலாக ஆட்டியதுஓல்ட்மன்க்கோடு கலக்க தண்ணீர் தேடினான் ரங்கு
சாமி வாந்தி எடுப்பதில்தான் மும்முரமாக இருந்தான்

விஷ்ணு வில்லியோடு கபடி விளையாடிக் கொண்டிருந்தான்அவனுக்கு ஒரு பிச்சைக்காரன் உதவிக்கொண்டிருந்தான்இருவரும் வில்லியைத் தூக்கி ஓரமாக கிடத்திக் கொண்டிருந்தார்கள்.  


தண்ணீர் ஊற்றும் வரை பொறுமை இல்லாத அந்த தலகுரங்கு சடாரென தாவியதுதாவிய வேகத்தில் டம்ளரில் இருந்த திரவத்தை சிந்தியபடி வாய்க்குள் கவிழ்த்ததுஅதன் கசப்பு சுவை உணர்ந்திருக்கவேண்டும்.  ப்ர்ர்ர்ர்-என பல்லைக் காட்டியதுகுரங்கு மொழியில் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லைஅனேகமாகதண்ணி வெச்சியே தலைவாஊறுகா வெச்சியா? என்பதாகத்தான் இருக்கும்ஆல்கஹால் அதன் மூளையைத்  தாக்கியிருக்கவெண்டும் இப்போது தலைகால் தெரியாமல் குதித்ததுமரத்தின் மேலே ஏறி அங்கேயிருந்து அடுத்த மரத்துக்குத் தாவியது.

டேமாப்ளைஇங்க பார்டா….தாத்தாவுக்கு மப்பு ஏறிப்போய் மரம்,மரமா தாவுறாரு….
ரங்கு சந்தோஷமாகக் கூவினான்வாந்தியெடுத்து டய்ர்டாகிப் போன சாமி இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாரானான். ரங்கு தனது கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கி குரங்குக் கூட்டத்திடம் எறிந்தான். அதற்க்கு குரங்குகள் பங்காளிச்சண்டை போட்டுக்கொண்டன.  

இங்கு சாமியும் ரங்குவும் பாட்டிலுக்காக சண்டை போட்டுக்கொண்டனர். 

ருசி கண்ட கருங்குரங்கு இவர்கள் சண்டையின் இடையே பாய்ந்து தனக்கும் பங்கு கேட்டது.  ஆனால் சாமியும் ரங்குவும் கொஞசம்கூட மதிக்காததால் அவமானப்பட்ட கருங்குரங்கு ரங்குவின் தொடையில் தனது பற்களில் நான்கை ராஜராஜசோழன் கல்வெட்டு போல பதித்ததுஅய்யோவென அலறி ரங்கு அப்படியே உட்கார்ந்துவிட்டான்


சத்தம் கேட்டு விஷ்ணுவும் பிச்சைக்காரனும் வில்லியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ரங்குவின் தொடையிலிருந்து ஆஃப்சீசனில் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவது போல ரத்தம் கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்தது.
விஷ்ணு தனது கர்சீப்பால் காயத்தை சுற்றி கட்டுப்போட்டு ரத்தம் வழிவதை தடுத்தான்பிச்சைக்காரனை வில்லியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சாமியும் விஷ்ணுவும் ரங்குவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்


ஸ்பத்திரி மலை அடிவாரத்தில் தேரடிக்கு அருகில் இருந்ததுஉள்ளே போனபோது நான்கு பேர் வரிசையில் இருந்தனர்...கம்பவுன்டர் போல இருந்தவன் காதுகளைக் குடைந்து கொண்டேஎன்ன நாய் கடிச்சிடுச்சா?-என்றான்.

இல்லை குரங்கு கடிச்சிடுச்சு….

கேட்டவுடதும் இரண்டடி பின்வாங்கினான்
  
என்ன குரங்கா….?...அதுகிட்ட ஏன்யா...வெச்சுக்கிட்ட?

 ம்ம்ம்ம்….நேர்த்திக்கடன்-என்றான் விஷ்ணு.

 இப்படி இருந்தாகுரங்கு மட்டுமில்ல குதிரை,பன்னி,மாடுன்னு எல்லா ஜீவராசியும் கடிக்கத்தான் செய்யும்…..சரி..சரி அப்படி...உட்காரு-என்று பெஞ்ச்சை காட்டினார் கம்பவுண்டர்.

 பெஞ்ச்சின்  ஓரத்தில் ரங்கு அமரவைக்கப்பட்டான்பெஞ்ச்சில் அமர்ந்திருந்த வேறு இருவர் ரங்குவை வேற்று கிரகத்து ஆசாமி போல பார்த்துவிட்டு பக்கத்தில்  அமர்ந்திருந்தால் ஆபத்து என்று எழுந்து நின்றுகொண்டார்கள்.

 ஒருவன் கொரங்குக்கு என்ன ஆச்சுஇருக்காசெத்துப் போச்சா?...கூட்டிட்டு வந்திருக்கலாமே-என்றான்.

 விஷ்ணு,“ம்ம்ம்கொரங்கு பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கு..-என்றான்.

 உனக்கு இதுவும் வேண்டும்......இன்னமும் வேண்டும் என.....மேலும் நான்கடி தள்ளி நின்றுகொண்டான்.

 அப்போது அவர்கள் டாக்டரால் அழைக்கப்பட,  ரங்குவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர் விஷ்ணுவும் சாமியும்.

 டாக்டர்....பாலுமகேந்திரா மாதிரி தொப்பி போட்டிருந்தார்.  சோடாப் புட்டிக் கண்ணாடியோடு ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் பாம்பு மாதிரி சுற்றியிருந்தார்.  Dr.M.A.தர்மராஜ்M.B.B.S.....என்று பலகை சொன்னது.

 ரங்குவுக்கு அந்த போர்டைப்  பார்த்தால்  எமதர்மராஜா என்பது மாதிரியே தெரிந்தது. கையில் பாசக்கயிறும் எருமையும்தான் மிஸ்ஸிங்.

 சொல்லுங்கோஎன்ன ஆச்சு…?

 ஸார் குரங்கு...கடிச்சிடுச்சு

 கேட்டதும்....அதிர்ந்தார்கையில் க்ளவுஸ் எடுத்து மாட்டிக்கொண்டார்.   வீல் சேரில் கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்துக்கொண்டார். ஜூவில் மிருகத்தைப் பார்ப்பது போல ரங்குவையே.....பார்த்தார்.   நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.

வயசு என்ன இருக்கும்?” 

“25 ஆச்சு-ரங்கு. 

அட உனக்கில்லையா….குரங்குக்கு....என்ன வயசு இருக்கும்?

 என்ன வயசுன்னு.....கேட்டுக்கலை-சாமி சொன்னதும்....டாக்டர் அவனை முறைத்தார்.

 ஏன் மாடசாமி, நமக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி கேஸ் வந்திருக்கா..?

 ”இல்லை..ஸார்பாம்பு பார்த்திருக்கோம்..நாய் பார்த்திருகோம், கரப்பாம்பூச்சி,எலி கூட வந்திருக்கு….கொரங்கு இதான் பர்ஸ்ட்-என்றான் சித்திரகுப்தன் மாடசாமி.

ஏம்பாகுன்றத்துக் குரங்கெல்லாம்  சாதுவாச்சே…?-என்ற டாக்டர்  ஒரு டி.டி இஞ்ஜெக்சனும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார்நான்கு நாள் கழித்து வரச்சொன்னார்காயத்திற்கு ட்ரெஸ்ஸிங்க் பண்ணிவிடச் சொன்னார்.   குரங்கு செத்துவிட்டால் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

 ரங்குவை காரில் உட்காரவைத்துவிட்டு விஷ்ணு மலைமேலே போய் பிச்சைக்காரனைப் பார்த்து நூறு ரூபாயும் தனது செல் நம்பரையும் கொடுத்துவிட்டு குரங்குக்கு எதாவது ஆனால் தனக்கு தகவல் தரச் சொன்னான்கொஞ்சம் தெளிந்திருந்த வில்லியை கீழே கூட்டிவந்து கிளம்பினார்கள்.


கொஞ்ச நேரத்தில் சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்து ரங்குவை கலாய்க்க ஆர்ம்பித்திருந்தனர்.

 என்னதான் இருந்தாலும்.....உங்க தாத்தா இப்படி பண்ணியிருக்கக் கூடாது

 உங்க தாத்தாவுக்கு.....சரியா சோறு வெச்சிருக்க மாட்ட….அதனாலதான் கோவத்துல தொடைக்கறியை டேஸ்ட் பார்த்துட்டாரு

 ”சோறு வெச்சயே….தண்ணி வெச்சியா…..அதனாலதான் ஓல்ட்மன்க் பார்த்ததும் குஷியாய்டுச்சு….

 “ஓல்ட் மன்க்....என்பது ஒல்ட் மங்கி.....எல்லாம் ஒண்ணுதானேதன்னோட சொந்த ப்ராண்ட் அப்படிங்கிறதாலே  குரங்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடுச்சு

 இதையெல்லாம் கேட்ட ரங்கு ரொம்பவும் டென்சனாகிப் போனான். காருக்குள்ளேயே அவர்களைப் அடிக்க ஆரம்பித்தான். ஒரிஜினல் குரங்கு மாதிரி காச்மூச் என்று கத்தினான்.  அடிக்கடி இடுப்பில வேறு் சொறிந்துகொண்டான். 

டேய்அமைதியா இருங்கடா….நம்மை கடிச்சுவெச்சிட்டான்னா....அப்புறம் நமக்கும் இந்த கதிதான்என்று விஷ்ணு தாழ்ந்த குரலில் சொன்னான். 

அதன்பிறகு அனைவரும் அமைதியானார்கள்அப்படியே ரங்குவை வீட்டில் இறக்கிவிட்டு எல்லோரும் கிளம்பிப்போனார்கள். 


ரண்டு நாள் யாரும் ரங்குவைப் பார்க்க வரவில்லைஇப்படி இது வரை இருந்ததில்லைஃபோனிலாவது பேசிக்கொள்வார்கள்எதுவோ, என்னவோ நடக்கிறது?  ரங்குவுக்கோ இருப்புக் கொள்ளவில்லை, நண்பர்களுக்கு ஃபோனினான்.  யாரும் எடுக்கவில்லை.  சரி விஷ்ணு வீடு பக்கத்தில்தான் இருக்கிறதுபோய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.  

விஷ்ணு வீடு பூட்டி இருந்ததுரங்கு காம்பவுண்ட் சுவரேறி உள்ளே குதித்தான்விஷ்ணுவின் ரூம் மாடியில் இருந்ததுஅருகில் இருந்த அசோக மரத்தில் சரசரவென ஏறி மாடிக்குப் போனான்ஜன்னல் சட்டத்தை கழட்டி கிடைத்த சந்தில் உள்ளே புகுந்தான்எத்தனை முறை  நைட் லேட்டாக வந்த போது விஷ்ணு இதுமாதிரி ஏறியிருப்பான்.

 அறையின் உள்ளே ஒரு ஆஃபீஸ் டேபிள் இருந்ததுஅதன்மீது இரண்டு துண்டுச் சீட்டுகளும் ஒரு இரும்பு ஸ்கேலும் இருந்தது.

“Mr.கோகுல்...
S W H2 6F இதுதான் குறியீடு….கவனம்-விஷ்ணு

இன்னொன்றில்,

“Sir,எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்விஷ்ணு
என ப்ரிண்ட் ஆகி இருந்ததுரங்குவுக்கு தலை சுற்றியதுஒரு எளவும் புரியவில்லைரங்கு என்று சொல்லாமல் எதோ S.P.கோகுல் என்றாவது சொல்லி இருக்கிறானே என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 


தே சமயத்தில் விஷ்ணு கட்டபொம்மன்சிலை சிக்னலில் நின்றிருந்தபோது  பிச்சைக்காரனிடம் இருந்து ஃபோன் வந்ததுஅந்த கருங்குரங்கு செத்துவிட்டதாம்விஷ்ணுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வில்லி ஊரில் இல்லை.   சாமியைக் கூப்பிட்டான்.  
அவன் கால நேரம் தெரியாமல் -
சரிடாஎன்ன செய்யலாம்….ஒரு மாலைய வாங்கீட்டு சாவுக்குப் போய்ட்டு வந்துடலாம்”-என்றான். 

டேய்….கொஞ்சம் சீரியஸா....பேசடா….” 

மாப்ளஎன்னதான் இருந்தாலும் நம்ம ரங்குவோட தாத்தா....இல்லையா?” 

இல்லடா....ரங்குவை வேறு .நல்ல டாக்டரா பார்த்து கூட்டீட்டு போவோம்டா....எனக்கென்னவோ பயமாஇருக்குடா  

 “.கே.கவலைப்படாதே.....உடனே அவனை அழைச்சிட்டுப் போய் டாக்டர் மங்களேஸ்வரனை பார்த்துட்டு வந்துடலாம்நீ ரங்குவைக் கூட்டீட்டு நேரா ஆஸ்பத்திரி வந்துரு.  நான் முன்னாடியே....போயிடறேன்.  ஆஸ்பத்திரி அட்ரஸ் தெரியும்தானே?

 ”தெரியும்....நான் ரங்குவோட வந்துடறேன்...

 ரங்குவை ஃபோனில் அழைத்தான்.


ங்கே…..ரங்கு சேரில் அமர்ந்து துண்டுச் சீட்டுக்களொடு மல்லுக் கட்டிகொண்டிருந்தான். அப்போதுதான்ரங்குவின் ஃபோன் ஒலித்ததுஅவன்தான்….விஷ்ணு….இன்ஃபார்மர் விஷ்ணு. 

"சொல்லுடா..." 

"டே..மாப்ள....இப்போ நான் வீட்டுக்கு வரேன்.  ரெடியா இரு...டாக்டரை பார்த்துட்டு வந்துரலாம்..." 

"ரெண்டு நாளா எங்கடா போயிருந்தீங்க எல்லோரும்...." 

“அதெல்லாம் வந்து பேசிக்கலாம்டா..."

 "நான் இப்போ உன் வீட்டுல.... உன் ரூமுலதான் இருக்கேன்...."

 "என் வீட்டுலயா....டே..அங்க யாரும் இருக்க மாட்டாங்களே...எல்லோரும் திண்டுக்கல் வரைக்கும் போயிருக்காங்கடா...." 

"உன் டேபிள் மேல இருந்த message எல்லாம் பார்த்துட்டேன்....."  

"டே...டே....மாப்ள....அதெல்லாம் ஒண்ணும் இல்லடா...நீ அங்கேயே இரு....இப்போ வந்துடறேன்...." 

போன் துண்டிக்கப்பட்டது.  வாடா வா..வந்து என்ன சமாதானம் சொல்லப் போகிறாய் என்று பார்க்கிறேன்.
  
சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான் விஷ்ணு.  

"ஏண்டா இப்படி மரமெல்லாம் ஏறி...கஷ்டப் படற.  ஒரு போன் பண்ணியிருந்தா....உடனே வந்திருக்க மாட்டேனா.."

"போன் பண்ணாதான்...எடுக்கவே மாடேங்கறிங்களே...?  அதனாலதான் இப்படி வந்தேன். சரி அதெல்லாம் கெடக்கட்டும்....இதென்ன குறியீடு..அது இதுன்னுட்டு.  எனக்கு தெரியாம.....என்னவோ நடக்குது போலிருக்கு....?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.  இத பார்....கொஞ்சம் உட்காரு...இந்தா தண்ணி குடி.  ரிலாக்ஸ் பண்ணிக்க.  இப்ப நான் சொல்லப்போறதை கேட்டுக்க.  குரங்கு கடிச்சதால.....கொஞ்சம் டென்சன் ஆயிட்டியா...நாங்க உன் கூட இருந்தா உன்னை அந்த குரங்கு மேட்டர வச்சே கலாய்ச்சிட்டு இருப்போம்.  அதனால உனக்கும் மெண்டல் பிரசர்  ஆயிடுது.  அதனாலதான் உன்னை ரெண்டு நாளைக்கு தனியா விட்டுடரதுன்னு  பிளான் பண்ணுனோம்.  அதை தவிர வேற ஒண்ணும் இல்லடா மாப்ள." 

"அப்புறம் இந்த துண்டுச்சீட்டுக்கெல்லாம்.....என்ன அர்த்தம்... சொல்லு" 

 “இதெல்லாம் நான் இன்பார்மர் ஆனா எப்படி ஷார்ட்டா உங்களுக்கு  message அனுப்பறதுன்னு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேண்டா" 

"சரி இதுக்கு என்ன அர்த்தம்...S W  H2 6F" 

"இதுவா...இதுகூட உனக்கு புரியலையா...நீ எல்லாம் எஸ்.பி.ஆகி பாழாப்போச்சு போ....  S-south,W-way,6F-6figure,H2-2figurehot... மீனாட்சிஅம்மன்கோவில் தெற்குவாசல்ல ஆறுபொண்ணுக இருக்காங்க.....அதுல ரெண்டு பொண்ணுக சூப்பரு...ன்னு அர்த்தம்.  இதுகூட புரியலையா...நீ எல்லாம் சைட் அடிச்சு கிழிச்சபோ?"

"அது ஏன்.....எனக்கு தப்பான குறியீடு..?" 

"உனக்குத்தான்....உடம்பு சரி இல்லையா...அதனாலதான்...தப்பான குறியீடு.  இருந்தாலும் நான் யாருக்கும் அனுப்பலை.  இதுதான் மேட்டரா..ஓகே இப்ப கோவம் தணிஞ்சுதா.  வா டாக்டரைப் பார்க்கலாம்.  இன்பார்மரா ப்ராக்டீஸ் பண்ணவே விடமாட்டீங்கப்பா.  உங்களுக்கு ஸார், மோர்னு மரியாதை வேற.... பொறம்போக்கு பசங்க." 

'த்தூ'-வென காறித்துப்பிவிட்டு அவனோடு ஆஸ்பத்திரி கிளம்பினான் ரங்கு.  


டாக்டரின் ரூம் இரண்டாம் மாடியில் இருந்தது.  

அங்கே சாமி ரெடியாக இருந்தான்.  இவன்தான் கடைசி பேஷன்ட்....கொஞ்ச நேரத்தில்  உள்ளே அழைக்கப் பட்டான். 

டாக்டர்.மங்களேஸ்வரன்...அதற்குப் பிறகு என்னென்னவோ ஏ,பி,சி,டி-என..எழுதி இருந்தது.

 டாக்டர்....கண்ணாடியை இறக்கிவிட்டு சரித்திரம் பூகோளம் கேட்டார்.

"இப்ப அந்த குரங்கு செத்துப் போய் விட்டது..."-என்கிற செய்தியையும் அடிசனலாக சொல்லப்பட்டது.
இதை கேட்டதும் ரங்கு அதிர்ச்சியாக...விஷ்ணுவைப் பார்த்தான். 

"டோன்ட்வொர்ரி...குரங்கு ஒண்ணும் விசஜந்து கிடையாது.  அதுவும் நம்மைப்போல ஒரு உயிர்தான்.  ரேபிஸ் என்கிற நோய் நாய்,வவ்வால் போன்ற மிருகங்களுக்குத்தான் வரும்.  குரங்குக்கு வர சான்சே இல்ல.  அதனாலே பயப்படாதீங்கோ.  இங்க பாருங்கோ ..."-என்று தனது  முழுக்கை சட்டையை முழங்கை வரை உயர்த்தினார். 

அங்கே ஒரு இரண்டு இன்ச்சுக்கு வெட்டுக் காயம் ஆகி,  ஆறி தழும்புபோல இருந்தது.  

"இது பத்து வருடங்களுக்கு முன்னால என்னை ஒரு குரங்கு கடிச்ச தழும்பு.  இதுவரை எனக்கு ஒண்ணும் ஆகலையே?  இப்பக் கூட பாருங்க நல்லாத்தானே இருக்கேன்.  ஸோ பயப்படாதிங்க.  நார்மல் டிடியும் ஆண்டிபயாடிக்கும் போதும்...ஒண்ணும்....பிரச்சினையில்லை..." 

அவ்வப்போது.....இடுப்புக்கு கீழே சொறிந்து...கொண்டார். 

மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு மூவரும் கீழே இறங்கி வர லிப்ட் இருக்கிறதா என்று பார்த்தனர்.  இல்லை.   படியிலேயே மூவரும் இறங்கி வந்தனர்.
 போர்டிகோவைத் தாண்டும்போது,  அருகில் இருந்த அசோக மரத்திலிருந்து யாரோ இறங்குவது மாதிரி தெரிந்தது.  இறங்கியவர் சாவகாசமாக சென்று தனது ஸ்கூட்டரை ஒரே உதையில் உதைத்து ஸ்டார்ட் செய்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.....டாக்டர்....மங்கி எனப்படும் மங்களேஸ்வரன். 




டிஸ்கி:  இந்தக் கதை பதிவுலகில் எழுதப்பட்ட 78 கதைகளில் பெஸ்ட் 15 க்குள் தேர்வாகி ஆறுதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பரிசுப்போட்டி முடிவுகள் இதோ இங்கே சுட்டிப் பாருங்கள்.


ஆதரவளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு-தமிழனின் சரித்திரம்.


மிழகத்தில் இருந்து களவு போன சமாச்சாரங்கள் ஏராளம் உண்டு. மஞ்சள் போன்ற நாம் விட்டுக்கொடுத்த பாரம்பரியம் மிக்க அரிய செல்வங்களை நமக்கே வியாபாரம் செய்யும் கார்பரேட் கம்பனிகள் இன்று நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.



நமது முன்னோர்களின் வரலாற்றுக்குள் புதைந்து போயிருக்கும், மறைக்கப் பட்ட செய்திகள் ஏராளம். சீனா என்றால் குங்பூ கலைதான் நினைவுக்கு வரும். அதனாலேயே சீனா செய்யும் அலப்பரைகள் அளவிடமுடியாதவை. ஆனால் அந்தக் கலை இந்தியாவிலிருந்து அதுவும் தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரத்திலிருந்து பொனது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

இந்த நூலைப் பிடித்துக்கொண்டு இடைஇடையே நோக்கு வர்மம், மரபியல் ஆராய்ச்சி என மசலா தூவி ஒரு விருந்தை படைத்திருக்கிறார் முருகதாஸ்.




போதி தர்மர்-1600 வருடங்களுக்கு முன்பு பல்லவர் குலத்தில் தோன்றிய, மருத்துவம், களரி, வர்மக்கலை கற்று தேர்ந்த அரசிளங்குமரன். புத்த மதத்தை தழுவி சீனா சென்று அங்கு கொள்ளை நோய் கொன்று அந்த மக்களுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுத்து மருத்துவமும் கற்றுத் தந்து உலகப் புகழ் பெற்ற ஷாலின் டெம்பிளை நிறுவினார் போதி தர்மர் எனும் டேமூ எனும் பல்லவ மன்னன்.

தாயகம் திரும்பும் சமயத்தில் சீனர்கள் சுயநலம் நோக்கம் கொண்டு நஞ்சு கலந்த உணவை கொடுத்தனர். அதில் விசம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டே(????) அவர்களின் விருப்பத்தை உணர்ந்து அதை நிறைவேற்றி தெய்வமானார். அன்று தான் கற்றுக் கொடுத்த கலை இன்று உலகம் முழுவதும் பரவி நின்றாலும் அந்த உண்மையான மூலம் இன்று மறைக்கப் பட்டு தமிழனுக்குச் சேர வேண்டிய க்ரிடிட் வராமலே போய்விட்டது.

இப்போது கதை தற்காலத்தில் பயணிக்கிறது. சுபா (ஸ்ருதி) எனும் இளம் ஜெனட்டிக் இஞ்சினீயர் தனது ஆராய்ச்சியில் மூதாதையர்களின் D.N.Aவோடு அவரது வம்சாவழியின் D.N.Aவை கலக்கும்போது மூதாதையரின் அத்தனை திறமைகளையும் திரும்பக் கொண்டுவரமுடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஆராய்ச்சிகளை சீனா, ஜெர்மன், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.


இதைக்கண்ட சீனா இது தனக்கு இடையூறாக இருக்கும் என்று சுபாவைக் கொல்ல முடிவு செய்து டாங்லீ எனும் ஷாலின் டெம்ப்ளினின் சிறந்த மாணவனை அனுப்பி வைக்கிறது. அது போக ‘ஆபரேசன் ரெட்’ எனும் கொடிய கொள்ளை நோயை இந்தியாவில் பரப்பும் திட்டத்தையும் செயல்படுத்தும் பொறுப்பையும் தருகிறது. அவனுக்கு நோக்கு வர்மம் எனும் ‘மைண்ட் கன்ட்ரோல்’ கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். அந்தக் கலையின் மூலம் யாரொருவரையும் அவன் வசம் கொண்டு வந்து தனது வெலைக்காக உபயோகித்துக் கொள்ள முடியும். இதுவும் போதி தர்மரின் சொத்தே.

இந்தியாவுக்கு வரும் டாங்லீ சுபாவை கொல்ல துடிக்கிறான். சுபாவோ தனது ஆரய்ச்சிக்காக போதிதர்மரின் வம்சாவழி சர்க்கஸ் கலைஞன் அரவிந்த்(சூர்யா)தை துரத்துகிறார். சுபாவைக் காதலிக்கும் சூர்யா ஆராய்ச்சிக்காகத்தான் தன்னை துரத்துகிறாள் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான். 

டாங்லீயின் நோக்கம் நிறைவேறியதா?? சுபாவின் ஆராய்ச்சி நிரைவுற்றதா?? அது போக ‘ஆபரேசன் ரெட்’ என்ன ஆயிற்று?? சூர்யாவின் காதல் நிறைவேறியதா??
 இந்த கேள்விக்குறிகளே மீதி சுவாராஸ்யக் கதையாகும்…………………………….அதை கொஞ்சமும் தொய்வில்லாமல் டெம்ப்ளேட் காட்சிகளோடு  செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.அர்.முருகதாஸ்…

 இப்படத்தை தாங்கி நிற்கும் பாத்திரங்கள் டாங்லீ, சுபா, பீட்டர் ஹெய்ன் மட்டுமே…

 சூர்யா---நடிக்க அதிக சான்ஸ் இல்லை. போதிதர்மராகட்டும் சர்க்கஸ் கலைஞனாகட்டும் இரண்டையும் அல்வா மாதிரி சுலபமாக செய்திருக்கிரார்…….

 பல்லவன், போதிதர்மர், டேமோ ஆன போதிதர்மர் என மேக்கப் மற்றும் உடல் மொழி பரவாயில்லை.

 குரங்கு கேட்கவரும் ஸ்ருதியிடம் வழிவது  யானையில் லிஃப்ட் கொடுப்பது காதலி ஏமாற்றினாள் என எண்ணிப் பாடும் ‘யம்மா யம்மா’ பாடலில் காட்டும் முக பாவனைகள் என சில இடங்களில் சூர்யா  இருக்கிறார், ஸ்ருதியை பார்க்க சூர்யா செய்யும் ஃபோன் சேட்டை ரசிக்க வைக்கின்றன. சூர்யாவின் சிக்ஸ் பேக் அதிரடி!!!!

 ஸ்ருதியின் முதல் படம் அட்டகாசமாக அமைந்தது அவருடைய அதிர்ஸ்டமே! கஜினியின் கல்பனாவைப்போல இந்தப் படத்தின் சுபாவும் அனைவரையும் வசீகரிப்பாள். சுபாவின்
project meetingல் தமிழில் பேசப்போய் எல்லோரும் இளக்காரமாகப் பார்க்க கொச்சைத் தமிழில் வக்காலத்து வாங்கிப் பேசும் போது ஒட்டுமொத்த தமிழர்களிடம் கைதட்டல் மூலம் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்…..டூயட் காட்சிகளில் க்யூட்டான ஸ்ருதியைக் காண முடிகிறது. ஜானியை எதிர்க்கும் காட்சிகளில் பயத்தையும் வீரத்தையும் ஒருங்கே காட்ட அவருடைய கண்கள் நன்றாக அவருக்கு உதவுகின்றன.  வட நாட்டு வாசனை வீசாத தமிழ் உச்சரிப்பை சரி செய்தால் போதும்.


ஜானி—பாத்திரத்திற்கேற்ப அருமையான தேர்வு. பேசவேண்டிய வசனங்களை

1 செ.மீ கண்களாலேயே பேசிச் செல்கிறார்…..சண்டைக் காட்சிகளில் spider man அனுபவத்தை உபயோகித்து அதிரடிக்கிறார்! Climax சண்டைக்காட்சியில் ஆணி அடித்ததைப்போல் உட்கார வைக்கிறார்.



Peter hein—சண்டைகாட்சிகளை ஹாலிவுட் தரத்தில் தர மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேசன் ஃபைட், மருத்துவமனை ஃபைட், மவுண்ட்ரோட் ஃபைட், இறுதி ஃபைட் என ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் கலக்கி எடுத்திருக்கிறார். மைண்ட் கண்ட்ரோல் மூலம் மாற்றப்பட்ட சாக்கடைத் தொழிலாளியும், ஒரு பெண்ணும் குஃங்பூ முத்திரை காட்டி சண்டை பொடுவது நல்ல டெக்னிக். இறுதிச் சண்டையில்  இவரே பெரும்பாலும் இப்படத்தை கடத்திச் செல்கிறார்.


ஹாரிஸ் இசையில் யம்மா யம்மாவும், முன்னந்தியும் முணுமுணுக்க வைக்கும். சண்டைக் காட்சியில் இவர் கொடுக்கும் உச்ச பீட்டொன்று தியேட்டரை விட்டு வெலியே வந்த பிறகும் மண்டையைக் குடைகிறது. யாரோ நல்லா இருக்கு என்று சொல்லி இருப்பார்கள் போலிருக்கு.  புண்யவான்.

ரவி கே.சந்திரன்- போதி தர்மர் காலத்திலும்- பாடல் காட்சியிலும் நானும் இருக்கிறேன் என்று தலையைக் காட்டுகிறார்.


முருகதாஸ் மீண்டும் ஒரு கஜினியைப் பொன்றதொரு அனைத்து மொழிக்குமான ஒரு கதையை கொடுக்க முனைந்திருக்கிறார். இது ஒரு இந்தி படத்துக்கான பார்முலாதான். ஒரு மூன்று வருடத்திற்கு இனி கவலை இல்லை. கன்னடம், தெலுங்கு, இந்தி என்று ஒரு ரவுண்டு வந்துவிடுவார். 


பல்லவனையும் சர்க்கஸ்காரானையும் லிங்க் கொடுப்பதுதான் சுவராஸ்யம். நோக்கு வர்மம் என ஒரு சின்ன நாட்டை வைத்து சண்டை காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.  ஆனால் நம்ப முடியவில்லை.

டைரக்டரை ஞாபகப் படுத்தும் சில வசனங்கள்….



மருந்து கண்டுபிடிக்க வெண்டிய விஞ்ஞானிகள் இன்று நோய் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்’


ஐ லவ் யூ-ங்கிறதை ஏதொ இன்னைக்கு இன்னொரு புதன்கிழமை என்கிற மாதிரி சொல்லீட்டுப் போறாடா’


கொரங்கு, யானை, சிங்கம்னு பழகிப் பழகி உன்னொட மனசும் மிருகமாகிப் போனது’


நல்ல விசயம்னா புக்ல தேடு…கெட்ட விசயத்தை குப்பைத் தொட்டியல தெடு’

கடலை சாப்பிட்டுக் கொண்டே அலட்சியமாக பதில் சொல்லும் ஃபாஸ்ட்ரேக் ஊழியரை கொன்றது பின் அதே கடலையை இவர் சாப்பிட்டுக் கொண்டுவருவதும்…ஃபோன் ஒலித்துக் கொண்டிருப்பதும் ரசிக்கலாம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது.  அனால் பொதுவாக எப்போதும் நான் பார்ப்பதில்லை. 
 

தீபாவளியன்று அதிகாலை கண்விழித்து எழுந்துவிட்டோம். பகலெல்லாம் ஆட்டம்…மாலையில் படத்துக்கு போகலாம் என்றால் இரவு பதினோறு மணிக் காட்சிக்குத் தான் டிக்கெட் கிடைத்தது. எனக்கோ பயம். படம் விட எப்படியும் இரவு மணி மூன்றாகி விடும் அதுவரை கண்விழிக்க முடியுமா என்று பயம்தான். ஆனால் படம் முடியும் வரை தூக்கம் வராமல் எல்லோரும் படம் பார்க்கவைத்ததே …..இந்தப் படத்தின் வெற்றிதான்.

ஏழாம் அறிவு- பார்க்கலாம்,  பாதகமில்லை .  எதிர்பார்க்க வைத்தது  கொஞ்சம் ஏமாற்றம்தான்.