அன்பு பதிவுலக வாசகர்களே மற்றும் பதிவர்களே ....
நேற்று திருப்பூர் சேர்தளம் அறிவித்திருந்த வலைபதிவர் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற நானும் சென்றிருந்தேன். அங்கு நிறைய வலைப்பதிவர்களை காண முடிந்தது.
சாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும், முரளிகுமார் பத்மநாபனும், தல வெயிலானும், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகியும், ராமன் மற்றும் கடலையூர் செல்வமும்(யாரையாவது விட்டிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க) எங்களை ஒரு குழந்தையைப் (எனக்கே இது கொஞ்சம் ஓவரா படுதுதான்) போல பாவிச்சு ஒவ்வொண்ணா சொல்லிகொடுதாங்க.
அதுவும் பரிசல்கார அண்ணாச்சி மணல்ல ஆவன்னா போடற மாதிரி கையை புடிச்சு சொல்லி கொடுக்காத குறைதான்.
அப்பவே வெண் புரவி என்கிற பெயரில் ஒரு புது வீடு (ப்ளாக்) கட்டி புது மனை புகு விழாவும் அமர்க்களமா நடந்துச்சு.
நானும் வெண் புரவியில் அட்டகாசமாய் ஏறி அபூர்வ ராகங்கள் ரஜினி (அப்ப பரிசல்காரன் கே.பாலச்சந்தர்-ஆ) மாதிரி கேட்-ஐ உடைச்சிட்டு ஒரு என்ட்ரி கொடுத்திருக்கேன்.
இதை நல்லவிதமா உபயோகிச்சுக்கிட்டு உங்களை கெட்டவிதமா இம்சை பண்ணப் போறேன்.
எல்லாரும் காத்திருங்க.....
பி.கு.: (என்ன அண்ணாச்சிகளா இப்ப நீங்க வச்ச டெஸ்ட்-ல நான் பாஸா, பெயிலா. கொஞ்சம் மானாட மயிலாட ரம்பா மாதிரி மார்க் போட்டு சொல்லுங்க).
அன்புடன்
வெண் புரவி அருணா
PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE
Subscribe to:
Post Comments
(
Atom
)
உங்ககிட்ட நிறைய விஷயம் இருக்கு நண்பரே! அத சுவாரஸ்யமா எழுதுவீங்கங்கறது மொத போஸ்ட்லயே தெரியுது! கலக்குங்க..
ReplyDeleteஉங்களுக்கு என் வாழ்துதுக்களும் ,அதை விட பன் மடங்கு எதிர்பார்ப்புக்களும் அன்போடும்,
ReplyDelete- ஜெய்
warm welcome...
ReplyDeleteநன்றி பரிசல்,
ReplyDeleteநன்றி பாரதசாரி,
நன்றிதிருநாவுக்கரசு.....
உங்கள் ஊக்கம்....
எனது ஆக்கம்.
vaazhthukkal... welcome
ReplyDeleteremove the word verification
வாழ்த்துக்கள்.வெண் புரவி.அன்புடன---காஸ்யபன்
ReplyDeleteவெண்புரவியின் முதல் பதிவே பாயும்புலி போல் உள்ளது.வாழ்த்துகள்
ReplyDeleteவெண்புரவி வேந்தே வருக வருக..
ReplyDeleteபரிசலை வழிமொழிகிறேன்....
நன்றி கேபிள் சங்கர்ஜி.....
ReplyDeleteவேர்ட் வேரிபிக்கேசன் -எடுத்து விட்டாச்சு!
நன்றி khasyappan எங்களைபோன்றோரை ஊக்குவிக்கும் உங்கள் பெரிய மனசுக்கு ஆயிரம் நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லரசன்..
ReplyDeleteநன்றி பூந்தளிர் ...
ReplyDeleteநீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு கவலை இல்லை
ஆரம்பமே அசத்தல்..
ReplyDeleteஉங்கள் எண்ணங்களை படிக்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteWhen I originally commented I clicked the "Notify me when new comments are added" checkbox and now each time a comment is added I get several e-mails with the same comment.
ReplyDeleteIs there any way you can remove me from that service?
Thanks!
my blog :: gta 5 hack