PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, November 10, 2010

இதுவும் திருப்பூர்தான்....


 துதான் திருப்பூர் என்று அண்ணன் நிகழ் காலத்தில் எழுதி இருந்ததை படித்தபோது அன்று நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றி சொல்லலாம் என்று இதை எழுதிகிறேன்....

தீபாவளிக்கு ஒரு தினம் முந்திய நாள்....
நான் எனது பார்ட்டிக்கு ஒரு நேம் செக் ரூபாய் 1907/= க்கு கொடுத்திருந்தேன்.
அவர் பேங்க்குக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டார்.  எனக்கு இரவு எட்டு மணிக்கு பேங்கிலிருந்து போன்.
"சார் உங்க பார்ட்டிக்கு  ரூபாய் 1907 க்கு பதிலாக  ரூபாய் 19007 கொடுத்துவிட்டோம்...."
பதட்டமாக மேனேஜர் கூப்பிட்டார்.

"அதெப்படி சார் அவ்வளவு கரெக்டா நம்ம பார்ட்டி தான் வாங்குனாங்கனு சொல்ல்றீங்க...?" என்று கேட்டேன்.

"சார் நம்ம கேஷியர் செக்குக்கு பின்னாடி டினாமிநேசன் கரெக்டா எழுதி இருக்கார்.  நாங்க 3
மணி நேரமா மண்டையை போட்டு உடைச்சு இதை கண்டுபிடிசிருக்கோம் சார்.  நீங்க வேணா வந்து பாருங்க ஒரு தடவை...."

நான் உடனே பார்ட்டிக்கு போன் செய்து கேட்டேன்.

அவர் தெளிவாக மறுத்தார்.

"சார் அதெப்படி கொடுத்திருக்க முடியும்.  நான் மூணு ஐநூறு ரூபாய் நோட்டும், நான்கு நூறு ரூபாய் நோட்டும் சில்லறையும்தான் வாங்கினேன்..."

"சரி.. உடனே நீங்க ஆபீஸ் வாங்க.."

"இல்ல சார் ... நான் காலையில் வர்றேன்...."

எனக்கு இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.

"இத பாருங்க ..இப்ப நீங்க வந்தீங்கன்னா சரி... இல்லையின்னா உங்க மேல தப்பிருக்குன்னு அர்த்தம்.."-என்றேன்.

உடனே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரும் அவரது மனைவியும்  எனது ஆபீசில் இருந்தார்கள்.

"சார் இப்போ நான் தண்ணி அடிச்சிருந்ததால்தான்  நான் வர முடியாதுன்னு சொன்னேன்.
 இப்ப நான் என்ன செய்ய?"

"நீங்க அதிகமாக பணம் வாங்குனீங்களா?"

"கிடையவே கிடையாது சார்... மூணு ஐநூறு நாலு நூறு ஏழு ரூபாய் சில்லரையும்தான் சார் நான் வாங்குனது..."

"சரி இப்பவே பேங்க் போயி சொல்லீட்டு வந்துருங்க..."-என்றேன்.

உடனே அவர் கிளம்பி சென்றார்.  எனக்கு அப்போது வேலை இருந்ததால்  நான் எனது ஸ்டாப் ஒருவரையும் கூட அனுப்பி வைத்தேன்.

பாங்கில் இவர் வந்த கோலத்தை பார்த்து அடுத்த நாள் காலையில் வரும்படி  சொல்லிவிட்டார்கள்.

டுத்த நாள் காலையில் நானும் அவரை அழைத்தபடி சென்று இருந்தேன்.

பேங்க் மேனேஜர் அந்த செக்கை காட்டினார். அதன் பின்னாடி 190 x 100 தெளிவாக  டினாமிநேசன் எழுதி இருந்தது... அதே மாதிரி எல்லா செக்குக்களையும் காட்டினார். அதிலேயும் தெளிவாக டினாமிநேசன் போட்டிருந்தார்கள்.

"எப்போதுமே எந்த காஷியரும் செக்குக்கு பின்னாடி இந்த மாதிரி டினாமிநேசன் எழுத மாட்டார்கள்.   நல்லவேளை இவருக்கு இந்த பழக்கம் இருக்கு. அதனால கண்டுபிடிக்க முடிஞ்சது.....எங்களோட டோட்டல் சார்டேஜ் 17100 ரூபாய்.  இவருக்குதான் அவ்வளவு ரூபாய் கரெக்டா அதிகமா கொடுத்திருக்கோம்"

ஆனால் நம்ம பார்ட்டியோ ஒத்துக்கவே மாட்டேன்கிறார்.

"சார் இவுங்க எங்கோயோ விட்டுட்டு என்னை பிடிச்சு தொந்தரவு பண்ணறாங்க...இதுக்கு மேல பேசுனாங்கன்னா நான் மனித உரிமை கமிசன் தான் போகவேண்டி இருக்கும்...."

கேஷியர் புலம்போ புலம்பென்று புலம்புகிறார்.

"சார் நான் கை காசுதான் போட்டு கட்டனும்... இது எனக்கு ஒரு ப்ளாக் மார்க் ஆகிடும்.  என்னோட ப்ரோமொசன் எல்லாம் பாதிக்கும்.....இன்னும் என் குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கூட எடுக்கலை.... ."

இவரோ..."சார் நான் அப்படி பண்ற ஆளா....உங்க கூட இதனை நாளா பிசினஸ் பண்றேன்.  எம்மேல ஏதாவது சின்ன ரீமார்க் உண்டா?   நீங்களே என்னை சந்தேகப் படலாமா? "-என்கிறார்.

நான் இருவருக்கும் இடையில் சிக்கி படாத பாடு பட்டேன்.

"நீங்க வேணா வாங்க... மூணு ஐநூறு ரூபாயில் ஒரு ஐநூறு நோட்டை டீக்கடையில் கொடுத்தேன்.  இன்னொன்றை வீட்டுல கொடுத்தேன்.  இன்னொன்று என்னோட பாக்கட்ல வச்சு இருக்கேன்"

ஐநூறு ரூபாயை எடுத்துக் காட்டினார்.

பேங்க் மேனேஜர் என்னை தனியாக அழைத்தார்.

"சார் பார்ட்டியைப் பற்றி உங்க ஒப்பினியன்  எப்படி நல்லவரா?"-என்று கேட்டார்.

"சார் நல்ல பார்ட்டிதான்.  ஒரு வருசமா வரவு செலவு வச்சிருக்கேன்.  இதுவரை ஒண்ணும் பிரச்சினையும் இல்லை"

"சரி விடுங்க...எனக்கு உங்க ஒபினியன்தான்  வேணும்.  இன்னொருமுறை கேட்டுப் பாருங்க...மனசாட்சிப் பிரகாரம் வாங்கிருந்தா கொடுத்துடச் சொல்லுங்க...இல்லையினா நாங்க எல்லோரும் சேர்ந்து ஷேர் பண்ணி பணத்தை கட்டிடறோம்..."

அவரோ ஒத்துக்கொள்வதாக இல்லை. அவரது மனைவியும்  அதையே வழிமொழிந்தார்.

ருவழியாக தீபாவளி முடிந்தது....
இன்று பாங்கிலிருந்து வரச்சொல்லி போன் வந்தது.
போனபோது...மேனேஜர் சிரித்தபடியே வரவேற்றார்.
"சார்.. பாங்க்ல கேமரா இருக்கிறதையே மறந்துட்டோம்.   நேற்றுதான் நினைவு வந்து ஆட்களை வெச்சு பழைய பதிவுகளை பார்த்தோம்.  நீங்களும் பாருங்க.."

கம்ப்யூட்டர் ஆன் பண்ணி காமெராவை ஓட விட்டார்கள்.

கேஷியர் இவரை அழைக்கிறார்....வலது புற டிராவில் இருந்து முதலில் ஏழு ரூபாயை கொடுக்கிறார்....  பிறகு மூணு ஐநூறு ரூபாயை எடுக்கிறார் ... இவர் ஏதோ சொல்கிறார்....உடனே எடுத்த பணத்தை அதிலேயே போட்டுவிட்டு  இடது புற டிராவில் இருந்து இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து ஒரு கட்டிலிருந்து பத்து நூறு ரூபாயை எடுத்துவிட்டு செக்குக்கு பின்னாடி டினாமிநேசன்
 எழுதி விட்டு அப்படியே கொடுக்கிறார்....அதை எந்தவித கூச்சமும் இல்லாமல் வாங்கி செல்கிறார் நமது பார்ட்டி.

நான் பார்த்ததும் அதிர்ந்தேன்.  என்ன மனுசனையா இவர்...என்று திட்டியபடி அவரை போனில் அழைத்தேன்.   உடனே பேங்குக்கு வந்தார்.

வந்தவர் "என்ன சும்மா சும்மா கூப்பிட்டு தொந்தரவு பண்றீங்க... நான் மேயரைக் கூப்பிடறேன்.  இல்லாட்டி போலிசுக்கு பொய் பேங்க் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்... "-என்று தாம் தூம் என்று குதித்தார்.

அவரை அமைதி பண்ணி வீடியோவை போட்டு காட்டினோம்.

வீடியோவை பார்த்துவிட்டு ஆள் பேயடித்தது போல உட்கார்ந்துவிட்டார்.  அப்போதும்கூட சமாளிக்கப் பார்த்தார்.

நான் அவரது மனைவியை அழைத்து வீடியோவை போட்டுக் காட்டச் சொன்னேன்.  உடனே ஆள் சரண்டர் ஆனார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் பணத்தை கொண்டு வந்து கட்டியதாக பாங்கில் சொன்னார்கள்.

ணம் என்னென்ன மாயங்களை செய்கிறது...எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

5 comments :

  1. எல்லா வங்கியிலும் எல்லா கேஷியருமே பெரும்பாலும் டினாமினேசன் எழுதித்தான் பணம் தருகிறார்கள். அதுவும் ஆக்ஸிஸ் பேங்கில் அந்த டினாமினேசன் சரி என நாம் ஒத்துக்கொண்டதாக மீண்டும் கையெழுத்து வாங்கித்தான் தருகிறார்கள்.

    இந்த நிகழ்வில் கேமரா கைகொடுத்துவிட்டது. மேலும் டினாமினேசன் கை கொடுத்துவிட்டது.

    என் இடுகையின் நிகழ்வில் டினாமினேசன் எழுதியதிலேயே கோட்டை விட்டு விட்டார்போல.
    கண்டுபிடிக்கமுடியவில்லை...

    உங்களைப்போல நானும் தொழில் சூழ்நிலையில் அதிருப்தியாக உள்ளேன்:)

    ReplyDelete
  2. இப்படியும் சில மனிதர்கள்!!

    ReplyDelete
  3. மிகப்பெரிய தொகை. வாங்கும் போதே, சரி பார்த்து கொடுங்க என்று சொல்லி இருக்கலாம். அதன் பிறகு கேட்ட போதாவது கொடுத்திருக்கலாம். என்ன செய்வது. தன்னை தானே சிதைத்து கொண்டார்.

    ReplyDelete
  4. நன்றி நிகழ்காலத்தில்
    நன்றி முனைவர் இரா.குணசீலன்
    நன்றி ராதாகிருஷ்ணன்
    நன்றி தமிழ் உதயம்

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......