PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, November 13, 2010

விதவை இலை சுமங்கலி இலை



தீபாவளிக்கு  வீட்டில் விருந்தினர்கள் வருகை...
என்னதான் இருந்தாலும் ஒரு பண்டிகையை உற்றாரும் சுற்றாரும் கூடி கொண்டாடினால் அதில் இருக்கும் சந்தோசமே தனிதான்.

நம்மைவிட பொடிசுகளுக்கு ஜாலியோ ஜாலிதான்.

நான் வாழை இலை வாங்க கடைக்கு போய் இருந்தேன்.

சாப்பாட்டு இலை 10ம் டிபன் இலை 10ம் வாங்கி வருமாறு தங்கமணியால் ஆணை ஸாரி அன்புக் கட்டளையிடப் பட்டிருந்தேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க..)

கடைக்காரரிடம் அப்படியே கேட்டேன் .....அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்..

கடையில் டிபன் இலை இல்லை.
கடைக்காரர்,"டிபன் இலையில் சாப்பிடக் கூடாது தம்பி... சாப்பாட்டு இலையே வாங்கிக்குங்க.."-என்றார்.

நாம் எதை வாங்குவது என்று இவர் எப்படி தீர்மானிக்கலாம்.  அதுமட்டும் இல்லாமல் தங்கமணியிடம போய் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது .....

நான் ஒரு ஐடியா சிகாமணி,
"தலைவாழை இலையை பிளந்து டிபன் இலை ஆக்கிடுங்க..." -என்றேன்.

அவர் இதைக் கேட்டதும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்....

"தம்பி அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது....ஏனா  தலைவாழை இலைங்கறது  சுமங்கலி இலை.  டிபன் இலைங்கறது விதவை இலை.  குடும்பம் வாழ்ற வீட்டுல விதவை இலை போட்டு சாப்பிடக்கூடாது.  நீங்க என்ன கேட்டாலும் நான் தரமுடியாது.  அது மாதிரி நான் ஏவாரம் பண்றதில்லை...தலைவாழை இலையே வாங்கிட்டு போங்க.."

தீர்மானமாக இருபது இலைகள் கட்டிக் கொடுத்தார்.

நானும் வேறு வழியில்லாமல் வாங்கி வந்தேன்.

வீட்டில் வந்து இதே கதையை சொன்னேன்.
 தங்கமணி என்னை ஏற இறங்கப் பார்த்தார்...
"நாங்களும் அதே கடையில எத்தனையோ தடவை இலை வாங்கி இருக்கோம்.  அதெப்படி உங்க கிட்ட மட்டும் ஏதாவொரு கதை சொல்றாங்க..."

நான் அப்படியே விலகிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன்.

ஒரு டன் அசடு வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.......




2 comments :

  1. ஓ அது யாவார டெக்னிக்கா? :-)

    ReplyDelete
  2. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......