மலர்களைப்
போல்
உன் விழி
என்றேன்..
இல்லை
மலர்தான் நான்
என்றது
உனது விழி!
சூரியன் போன்ற
விழிகள் என்றேன்-
இல்லை
சூரியகாந்திப் பூதான்
நான்
என்றது
உனது விழி!
சூரிய காந்தி விழி
என்றால்
சுடுமோ-என்றேன்,
அசடே
காந்திப் பூ
எப்போதடா
சுடும்?-என்றது
உனது விழி!
உன் கொல்லும்
விழிகளைகண்டு
'அருகில் வர
பயம்'
என்றேன்-
வாரி அணைத்து
தனக்குள்
வைத்துக்கொண்டது
உனது விழி!
உனது விழி!
மலர் விழியா?
புதைகுழியா?
மலர்களுக்குள்
நான்
புதைந்து போனேன்..
உண்மையிலேயே
உன் விழிகள்
கொலைகார விழிகள்தான்!
பிறகுதான்
கண்டுகொண்டேன்
விழுங்கியது
உனது விழிகள்
மட்டுமல்ல
எனது விழிகளும்தான்!
விழுங்கியது
உனது விழிகள்
மட்டுமல்ல
எனது விழிகளும்தான்!
Nice.
ReplyDeleteTM -
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்...
ReplyDeleteஎன்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை
கவிதையும் அனைத்துப்படங்களும் அருமை
ReplyDeleteit s nice
ReplyDelete//காந்திப் பூ
ReplyDeleteஎப்போதடா
சுடும்?//
அடடா! அருமை.