PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Sunday, January 1, 2012

DAM 999 விமர்சனம்.


ஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம்,  முல்லைபெரியார் அணையைப் பற்றிய படம் என்று படம் காட்டிய படம், எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாமே என்று பார்த்தேன்.

படத்தில் நாலைந்து கதைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு போகிறது.  வினய்(ஜெயம்கொண்டான்)-விமலா ராமன் காதல் கதை, வினய்-யின் மனைவி டாகுமெண்டரி பண்ணி சாகசங்கள் செய்யும் கதை,  இவர்களின் குட்டிப்பபையன் சர்க்கரை நோய் நோயாளி, பிரெட்ரிக்-ரசியா நேவியில் பணிபுரியும் ஜோடிகளின் காதல் கதை.  இவங்க தாத்தாதான் அணையைக் கட்டினாராம். ஆஷிஸ் வித்யார்த்தி வில்லன்-அது ஒரு தனி ட்ராக்.

 வினய்-யின் அப்பா ஒரு ஆயுர்வேதிக் மற்றும் ஜோசியர்.  அவர் கணிப்பது எல்லாம் சரியாக நடக்கிறது.   தனது மகனுக்கும் மகள் போல வளர்க்கும் விமலா ராமனுக்கும் காதல். ஆனால் ஜாதகத்தில் ஒத்து வராது என்று காதலைப் பிரித்து, மகன் வேறொரு வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்து, சர்க்கரை நோயாளி மகனை பெற்று, அவனது மனைவியோஅசைன்மென்ட் அசைன்மென்ட் என்று சுற்றிகொண்டிருப்பதால் வெறுத்து தன் பழைய காதலியை சந்தித்து காதல் பண்ணலாம் என்று சொல்லும்போது பழைய மனைவி வந்து நானே இருந்துக்கிறேன், ஒரே ஒரு அசைன்மென்ட் கடைசியா முடிச்சுட்டு வரேன்னு சொல்ல தட்டுத் தடுமாறும் வினய்-யும் மண்டையை பிச்சுக்கும் நாமும் கடந்த காலத்தில் எத்தனை தமிழ்ப் படங்களை பார்த்து பாதியில் எழுந்து வந்தோமோ எத்தனை டைரக்டர்கள் சாபம் விட்டார்களோ தெரியவில்லை.  அப்படி படுத்தி எடுக்கிறார்கள்.

நல்லவேளை நம்ம அம்மா ஜெ செய்த ஒரே நல்ல காரியம் இந்த படத்தை தடை பண்ணியதுதான். அநேகமாக படத்தை பார்த்துத்தான் தடையே பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதில் டேம் எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அதைத்தான் படம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.  கடைசியில் பத்து நிமிடங்களுக்கு நம்ம சின்னப் பசங்கள் வீடியோ கேம் விளையாட்டில் வருமே அதுமாதிரி செட்போட்டு டேம் உடைகிறமாதிரி காட்டுகிறார்கள்.  மலையாளிகளே காறித்துப்பும் அளவுக்கு இருக்கிறது காட்சிகள்.  பிணம் விழும் காட்சியெல்லாம் பார்த்து இது ஒரு ஹாலிவுட் படம் என்று நம்பமுடியவில்லை.  நம்ம ராமநாராயணனை விட்டிருந்தால் பட்டாசு கிளப்பி இருப்பார்.


எதை நம்பி வார்னர் பிரதர்ஸ் பணத்தைப் போட்டார்கள் எனத் தெரியவில்லை.   டேம் உடைவதும் அதன் பலமின்மையால் உடைவதாகக் காட்டவில்லை.  நிலநடுக்கம் ஏற்படுவதாலும், அரசியல்வாதிகளின் ஊழலால் கட்டப்பட்ட அணை என்பதாலும் உடைகிறது.  அதில் மெரைன் சிட்டி எனும் ஊர் அழிவதாக் காட்டி கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் (ஜோதிடரைத் தவிர) பிழைத்துக்கொள்கிறார்கள்.  பிறகு பார்த்தால் அந்த மெரைன் சிட்டி-யில்தான் புத்தக வெளியீடு நடக்கிறது.  வெள்ளம் வந்ததற்கான அறிகுறியே காணவில்லை.  அட தேவுடா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையைக் காட்டி இந்த படத்துக்கு மார்க்கெட்டிங் பண்ணி போணி பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் இசை வேண்டுமானால் கொஞ்சம் தேறலாம்.  அதுவும் ஆஸ்கார் செல்லும் அளவுக்கெல்லாம் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தை தடை நீக்கி மக்களிடையே கொண்டு வரவேண்டும்.  நிச்சயம் மக்களே புறக்கணிப்பார்கள்.  அப்படி ஒரு மொக்கைப் படம்.  ஆகவே மக்களே ஒரு வேளை தடை நீங்கி வந்தால் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள்.  அப்படிப் போகணும்னா சொல்லுங்க இருநூறு நாட்களைத் தாண்டி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கும் பவர் ஸ்டாரின் லத்திகா படத்துக்கு டிக்கெட் எடுத்து தர்ரேன்.
 

12 comments :

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள் விமர்சனம் அருமை.இங்க ரிலீஸ் ஆகவில்லையே

    ReplyDelete
  2. தொழில் நேரம் இலக்கிய ஆர்வத்தை தின்றுவிட்டதால் அதிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

    நாங்க மீண்டு வந்துட்டோம்.


    குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......

    மறக்க மாட்டீங்க தானே?

    நிச்சயம் இந்த படத்துக்கு இத்தனை எதிர்ப்புகள் தேவையில்லை என்பது தான் என் கருத்தும். ஆமா எங்கே பாத்தீங்கன்னு சொல்லவே இல்லை?

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    ReplyDelete
  4. and you started to review movies too?.. u r stepping in every kind of fields.. nice venpuravi..keep it up

    ReplyDelete
  5. அனுபவ விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. @kovai neram
    நன்றி கோவை நேரம். படத்தை நான் மலையாளத்தில் பார்த்தேன். தமிழ்த் துரோகி என்று திட்டாதீர்கள்.

    ReplyDelete
  7. @ஜோதிஜி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜோதிஜி.
    நாங்களும் சீக்கிரம் மீண்டு வந்துருவோம்ல?

    ReplyDelete
  8. @சுந்தரவடிவேலு
    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    @இராஜராஜேஸ்வரி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. இப்பதான் இந்த பதிவு கண்ணில்பட்டது என்று நினைக்கிறேன்..நல்ல விமர்சனம்..நன்றி.

    ReplyDelete
  10. இவ்வளவு மொக்கைப் படத்துக்கா இவ்ளோ பில்டப்பு...என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. AFTER A DAM REVIEW, WHY YOU CLOSED YOUR WRITING LIKE A CLOSED DAM?.. FLOW SOMETHING ELSE..CRANES HERE ARE WAITING TO ENJOY YOUR FISHES...BUT YOU WERE NOT AT ALL RELEASING A WATER.. LOL..

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......