PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Sunday, November 20, 2011

புறக்கணிப்பின் வலி



நானில்லாமல்
நடந்ததில்லை
உன் திருவிழாக்கள்!

நீ
கொண்டுவந்த
சந்தோசங்கள்
என்னிலும்
படர்ந்திருக்கின்றன.

உனக்கு வந்த
துக்கங்களுக்காக
எனது இதயத்திலும்
ரத்தம் கசிந்திருக்கிறது!

நிலவை
விழுங்கும்
பாம்பு போல
கொஞ்சம் கொஞ்சமாக
விழுங்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது...
நம் நட்பு!

ஏன்
எப்போதும்
உனக்கு
முற்றுப்புள்ளியே
பிடிக்கிறது?

என்னிடம்
இருந்து
விலகி இருப்பதுதான்
உனக்கு சந்தோசம்
எனில்
அப்படியே
செய்கிறேன்....!

எனது
இதயத்தில்
வழியும்
குருதிதான்
உனது பானமெனில்
இன்னும் தருகிறேன்...
தாகம் தீரும்வரை
அருந்து..!

இறந்தபிறகு-எனது
கண்களைத் தோண்டிபார்
அதில் தெரியும்
அழிக்க முடியாத - உன்
முகபிம்பங்கள்!

பிறகேனும்
நம்பு
இந்த
அரைக் குருட்டுக்
கண்களை!


5 comments :

  1. இறந்தபிறகு-எனது
    கண்களைத் தோண்டிபார்
    அதில் தெரியும்
    அழிக்க முடியாத - உன்
    முகபிம்பங்கள்!
    Very much feel... great

    ReplyDelete
  2. எல்லோருக்குள்ளும் ஒரு குருதி வடியும் கதை இருக்கத்தான் செய்கிறது. :(

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. வலிக்கும் வரிகள், ரத்தம் கசிவதை உணர முடிகிறது அந்தப் படத்தை பார்க்கையில் என் கண்ணிலும்...
    அருமை நண்பரே

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......