எங்க வீட்ல ஒரு வாண்டு இருக்கான். அவன் எதையாவது சுறுசுறுப்பா – பரபரப்பா செய்துட்டே இருப்பான். இன்னைக்கு என்கிட்டே வந்து நான் ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருக்கேன் –என்று சொன்னான். எல்லாம் கலைஞர் டி.வி. நாளைய இயக்குனர் – நிகழ்ச்சியின் பாதிப்பு..
என்னடா இது இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே “அதுக்கெல்லாம் கதை வேணுண்டா”- என்று சொன்னேன்.
என்னடா இது இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே “அதுக்கெல்லாம் கதை வேணுண்டா”- என்று சொன்னேன்.
“இப்ப வர்ற படத்தில எல்லாம் கதைய வெச்சுட்டா எடுக்கிறாங்க?”-என்று எதிர் கேள்வி போட்டான்.
அது நியாயம்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே “அதுக்காக நாமளும் அப்படி இருக்கலாமா?” என்றேன்.
அது நியாயம்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே “அதுக்காக நாமளும் அப்படி இருக்கலாமா?” என்றேன்.
“அதுக்குத்தான் நான் ஒரு கதையை யோசிச்சு வைச்சிருக்கேன்” என்றான்.
“ஓகே கதையை சொல்லு” என்றேன்.
“சொல்லறேன்... ஆனா ஒரு கண்டிசன்.....நீங்கதான் தயாரிப்பாளரா இருக்கனும், சம்மதமா?”-என்று ஒரு பிட்டைப் போட்டான்.
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்...முதல கதையைச் சொல்லு... கதை நல்லா இருந்தா மேற்கொண்டு பார்க்கலாம்” என்றேன்.
“ ஓகே கதை கேக்க நீங்க ரெடியா?”-என்று எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு இரண்டு கைகளையும் விரித்த மாதிரி வைத்துக்கொண்டு பாரதிராஜா போஸில் நின்றான்.
“ஸீன் ஓபன் பண்ணுனா” என்று கைகளை அப்படியே மேலே கொண்டுபோனான்.
“அபூர்வ ராகங்களில் ரஜினி கேட்டை தள்ளிட்டு வர்ற மாதிரி நம்ம ஹீரோ வர்றான்..”
“யாருடா ஹீரோ...?”-என்று கேட்டேன். எங்கே ஒரு பெரிய ஹீரோவை போட்டு நம்ம பட்ஜெட்டை எகிற விடுவானோ என்று பயம் எனக்கு.
“பெரிய ஹீரோவை போட்டு படம் எடுக்கிற அளவுக்கு உங்க கிட்ட பணம் இல்லைன்னு எனக்கு தெரியும். அதனால ஹீரோவுக்கு ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுங்க போதும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “-என்றான்.
“சரிடா...யாரு ஹீரோ ?”
“நான்தான்...”-என்ற போது நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.
“சரி கதையைச் சொல்லு.. அப்புறம் பார்ப்போம்.”-என்றேன்.
கதை சொல்ல ஆரம்பித்தான்..
“ஒவ்வொருத்தனுக்கும் வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கும். ஆனா நம்ம ஹீரோவோட லட்சியம் ரொம்ப சிம்பிளானது.....ஆனா அதை அடைய அவன் எடுத்துக்கிடுற முயற்சிகளும், எதிர்படுகிற தடைகளும்தான் கதை.”
“என்னடா லட்சியம்?”
“ஒரு உண்டி வில்லால கல்லை வைத்து கரண்டு கம்பியில் உட்கார்ந்து இருக்கிற காக்காவை அடிக்கனும்.- இதுதான் அவன் எடுத்திருக்கிற லட்சியம்.”
“கரண்டு கம்பியில உட்கார்ந்து இருக்கிற காக்காவை அடிக்கிரது எல்லாம் ஒரு லட்சியமாடா?” என்று கேட்டேன்.
“இடையில பேசாம கதையை கேக்கணும்”-என்று சொல்லி கதையை தொடர்ந்தான்...
“பரீட்சை சமயத்துல அவன் மொட்டை மாடிக்கு போய் படிக்கறது வழக்கம். ஆனா அங்க படிக்கறது மட்டும் நடக்காது. படிக்கறது மட்டும் அல்ல படிக்கறதே நடக்காது....உண்டி வில்லால அங்க வர்ற போற காக்கையை கல்லால அடிச்சு விரட்டீட்டு விளையாடுவான். சில நேரங்களில் உண்டி வில்லால கரண்டு கம்பி மேல உட்கார்ந்து இருக்கிற காக்கையை அடிப்பான். ஆனா எந்த சமயத்துலயும ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது. இவனெல்லாம் எங்க அடிக்கப்போறான் என்று தில்லாக காக்கா உட்கார்ந்து பார்த்தபடி இருக்கும்.
கடைசியில முடிவு என்னாச்சுன்னா ஒரு காக்கையை கூட இவன் அடிச்சதே இல்லை.... ஆனா பரீட்சைல கோட்டை உட்டதுதான் மிச்சம்.... இதுக்காக அவங்க அம்மா அவனை விரட்டி விரட்டி காக்கையை அடிச்சதை விட கேவலமா அடிச்சாங்க.... அடி வாங்கிய நம்ம கதா நாயகன் அழுதபடியே மொட்டை மாடிக்கு போனான். அப்ப ஒரு காக்கா வந்து கரண்டு கம்பி மேல உட்கார்ந்தது. கா கா என்று கத்தியது, அவனுக்கு “என்னையா அடிக்கப் பார்த்த...” என்று கிண்டலா சிரிச்ச மாதிரி தெரிஞ்சது. இதனால ஆத்திரம் அடைந்த நம்ம கதா நாயகன் “சிரிப்பா சிரிக்கிற...”என்று உண்டி வில்லை எடுத்து ஒரு கல்லை வைத்து அத்தனை ஆத்திரத்தையும் அதில் செலுத்தி “இன்னைக்கு நீ தந்தூரி ஆகப் போற...” என்று சொல்லி கல்லை விட்டான். காக்கா அசந்து இருந்து இருக்கும் போல...கல்லடி பட்டு திருகி கீழே விழுந்தது...”ஆகா நான் ஜெயிச்சுட்டேன்...” என்று கத்தி ஆர்பபாட்டம் செய்தான். இதுக்கப்புறம்தான் கிளைமேக்சே...
உடனே எங்கிருந்துதான் அத்தனை காக்கா வந்ததோ தெரியவில்லை.....ஒவ்வொன்றாய் வந்து அவன் தலையில் தபேலா வாசித்தது. அதிலிருந்து தப்பிக்க அவனும் தன்னை விஜய்-ஆக நினைத்துக்கொண்டு கையாலும் காலாலும் உதைக்கப் பார்த்தான். அதற்குள் அவனுடைய அம்மாவும் அண்ணனும் ஓடி வந்து காப்பாத்தினார்கள்”.
இதுதான் கதை... என்றான்.
“எப்படி இருக்கு?” என்று என் முகத்தைப் பார்த்தான்.
“நல்லாத்தான் இருக்கு.... ஆனா காக்காவா யார் நடிக்கிறது...உனக்கு வேணா மேக் அப் பண்ணி பார்த்துடலாமா ?”
“அதெல்லாம் அனிமேசன்ல பண்ணிக்கலாம்.”-என்ற அவன் தன்னம்பிக்கையைப் பார்த்து அசந்து நின்றேன்.
“என்ன நீங்க தயாரிக்க ஒத்துக்கிறீங்களா...?”
“ஓகே எப்ப ரிலீஸ்?”-என்றேன்....
“எந்திரன் எப்ப ரிலீசோ அப்பத்தான் நம்ம படமும் ரிலீஸ்...”
“படத்து பேர் என்ன?”
“காக்கா .... காக்க...”
பாராவாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கலாம்!
ReplyDelete(அட்வைஸ்கள் இலவசம்!)
:)
நன்றி அண்ணாமலை.....
ReplyDeleteபாரா பிரிச்சு எழுதிட்டேன்.
இலவச அட்வைசுக்கு நன்றி
நன்றாக இருக்கிறது நண்பரே
ReplyDeleteகொஞ்சம் கதைய மாடிஃபை பண்ணா அடுத்த இளைய தளபதி படம் ரெடி ;-)
ReplyDeleteகதை அருமை ...
ReplyDeleteதிருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteநாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.
அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...