ஷகிலாவும் வசந்த் & கோ விளம்பரமும்.......
சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் டிவியை நோண்டிக்கொண்டிருந்த போது வசந்த் டிவியில் ஷகிலா நடித்த மலையாளப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது... ஆஹா நல்ல படம் சிக்குச்சு என்று பார்த்துக்கொண்டிருந்தேன். நாயகனும் ஷகிலாவும் பேசிக்கொண்டபடியே பெட்ரூமுக்குள் போகிறார்கள். இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்காருகிறார்கள்... பேசியபடியே கைகள் இணைகின்றன... நாயகனின் கை நாயகியின் முகத்தை வருடுகிறது...நாயகியின் கண் சொக்குகிறது...இப்போது நெருங்கி உட்காருகிறார்கள்...நாயகன் அவளை அப்படியே கட்டிப்பிடித்து தன் முகத்தை நாயகியின் முகத்தருகே கொண்டு போகும்போது........
நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் வசந்த் & கோ என்று விளம்பரம் வருகிறது.......
அடங்கொய்யால விளம்பரம் போட ஒரு நேரம் காலம் கிடையாதா....?. இப்படி இந்த நேரத்துல விளம்பரம் போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கிட்டா எவன் வசந்த் & கோ கடைப்பக்கம் போவான்னு தெரியலை.....
(விளம்பரம் முடிஞ்சு பார்த்தா ரெண்டு பேரும் ரூமை விட்டு வெளியே வருகிறார்கள்.....எத்தனை பேர் சாபம் விட்டார்களோ என்று தெரிய வில்லை.)
விஜய்-னா விஜய்தான்.
சரி இதுதான் இப்படியென்று இதைத்தாண்டி வேறொரு சேனலுக்கு போனால் விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது. மின்சாரக்கண்ணா என்று நினைக்கிறேன். கதாநாயகி ரம்பாவை நடுஹாலில் கட்டிப்போட்டு வில்லனும் அவன் ஆட்களும் சுற்றி உட்கார்ந்து வசனம் பேசியபடி இருக்கிறார்கள்.. திடீரென்று நம்ம இளைய தளபதி மாடி பால்கனியில் என்ட்ரி ஆகிறார். அப்படியே வசனம் பேசிக்கொண்டே படியில் இருந்து இறங்கி வருகிறார். என்னடா இது ஆச்சர்யமா இருக்கே ....பால்கனியில் இருந்து அப்படியே ஒரு டைவ் அடிச்சு குதிக்காமல் சாவகாசமாக படியில் இறங்கி நடந்து வருகிறாரே... விஜய் படத்துக்கே கேவலமாச்சே- என்று யோசித்தபடி இருந்தேன்....
இறங்கி வந்தவர் வில்லனை பார்த்து "என்னடா ஹீரோ டைவ் அடிக்காம படியில இறங்கி வர்றானு பார்க்கிறீங்களா.... டைவ் அடிச்சுட்டாப் போச்சு.."-என்று சொல்லியபடி ஏறிப் போய் அங்கிருந்து ஒரு டைவ் அடித்தார் பாருங்கள்.
நான் அசந்து போய்விட்டேன்... எப்போதுமே விஜய் ஏமாற்றமாடார் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன். அப்படியே ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால்கூட அதை உடனே திருத்திக்கொள்வார் என்பது இதுதானோ...?
மானாட மயிலாட
மானாட மயிலாட பார்த்து ரொம்ப நாளாச்சு.... ஏனோ இப்போதெல்லாம் அதுக்கு க்ரேஸ் குறைஞ்சு போச்சு... அகஸ்மாத்தாய் பார்த்துகொண்டிருந்தபோது கோகுலும் தமிழரசனும் ஜோக் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கோகுலை எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டிருப்பார். சிரிக்கவும் வைப்பார். இதில் சக நடன மணிகளை இமிட்டேட் செய்து அனைவரையும் சிரிக்கவைத்து கொண்டிருந்தார். நல்லாத்தான் இருந்துச்சு.....
திடீரென்று நிகழ்ச்சிக்கு இடையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் போட்டார்கள். அது முடிந்தவுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. அது ஏதோ நிகழ்ச்சி தயாரிப்பாளரின் (ஜே.வீ.மீடியாஸ்) சொந்த விளம்பரம் போல் தெரிகிறது... அதுக்காக இப்படியா.. பிரேக் என்றுகூட சொல்லாமலே விளம்பரம் போடுவது.... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா......! இந்த டெக்னிக் எப்படி கலாநிதி மாறனுக்கு தெரியாம போச்சு... ?
திருப்பூர் பந்த்
திருப்பூர் நகரமே இப்போது நூல் விலை உயர்வால் விழி பிதுங்கிகொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் பார்வையை திருப்ப என்னென்னவோ செய்கிறார்கள். ஒருபக்கம் ஜெயலலிதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வரும் 24-25 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் பந்த் பண்ணலாம் என்று டீமா சங்கம் அறிவித்திருக்கிறார்கள்... ஆகவே மகா ஜனங்களே வரும் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் எல்லா டூரிஸ்ட் சென்டர்களும் திருப்பூர்காரர்களால் நிரம்பி வழியப் போகிறது.... உற்சாக பானம் மடை திறந்து ஓடப் போகிறது... வாழ்க பந்த்.
ப்ந்த் நடக்குமா நடக்காதாங்கற நிலைமைலதான் இருக்கு பாஸ்..
ReplyDelete