எங்கள் வீட்டில் ஒரு சண்டை நடந்து கொண்டிருந்தது.
உப்புப் பெறாத விஷயத்துக்கு தங்கமணியும் எனது மகனும் மும்முரமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். நிஜமாலுமே உப்புப் பெறாத விஷயம்தான்.
உப்புமாவில் உப்பு குறைவானதற்காக சண்டை. பேச்சுக்கு பேச்சு அந்த 11 வயது மகன் கவுன்டர் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த மாதிரி வீட்டுச் சண்டைகளில் உலகப் போரை விட சுவராஷ்யங்கள் அதிகம் என்பதை உங்களைப் போலவே நானும் தெரிந்து வைத்திருப்பதால் நானும் கவனிக்க ஆரம்பித்தேன். நம்மால் அது மட்டும்தானே முடியும்.
“அம்மா உப்புமான்னா... உப்பு இருந்தாதான் அது உப்புமா. இது வெறும் சப்புமா”
”மொளைச்சு மூணு இலை விடலை..உனக்கென்னடா போட்டதை தின்னுட்டு போவியா?”
“அம்மா உப்பு இருக்கானு தெரிஞ்சிக்க மூணு இலை முளைக்கவெண்டியதில்லை. நாக்கு முளைச்சாலே போதும்”
“உன்னைப் பெத்த நேரம் ரெண்டு தென்னம்புள்ளைய வெச்சிருக்கலாம். தேங்காயாவது காய்ச்சிருக்கும்.”
“தென்னை மரத்துக்கும் உப்பு வெக்கனும். இல்லாட்டி வளராது”
“உன்னை பத்து மாசம் கஸ்டப்பட்டு சுமந்து பெத்த அம்மாட்ட பேசற மாதிரியா பேசற?”
“பத்து மாசம் யாரு கஸ்டப்பட்டா தெரியுமா? நாந்தான் கஸ்டப்பட்டேன். பத்து மாசம் ஒரே மாதிரி குத்தவெச்சு உட்கார்ந்து பாரு தெரியும். நான் உட்கார்ந்து இருக்கேன். அதுவுமில்லாம அந்த டார்க் ரூமுல ஒரு ஃபேன் உண்டா? ஒரு லைட் உண்டா? எண்டர்டைன்மெண்டுக்கு ஒரு டி.வி உண்டா? இல்லை ஒரு வீடியோ கேம்ஸ்தான் உண்டா?”
தங்கமணி ஆவென்று வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
“நான் வயிற்றுக்குள் இருந்த சமயத்தில் என் பேரைச் சொல்லிட்டு என்னென்னவெல்லாம் வாங்கி தின்னிருப்ப. அதெல்லாம் எனக்கு வந்து சேர்ந்துச்சா? வளைகாப்பு என்கிற பேரில் எல்லா சந்தோஷங்களும் உனக்குத்தானே. எனக்கு என்ன லாபம்?”
“அடப்பாவி ஒரு ஸ்பூன் உப்புக்கு என்னென்னல்லாம் பேசறான் பாருங்க? வடிவேலு படத்தைப் பாத்து பொடிசுக ரொம்ப கெட்டுப்போச்சு!”
நான் ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டேன். ஆனால் உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தேன். என்னால் முடியாதது எல்லாம் என் மகனால் எப்படி முடிகிறது என்ற வியப்பில் அந்த சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்..
“ஒண்ணும் சொல்லாம அந்த மனுஷனே தின்னுட்டு போறாரு...”
ஆஹா சனி பகவான் மெதுவாக என்னை நோக்கி திரும்புகிறது. இன்னைக்கு எனக்கு ஏழறைச் சனிதான்.
“ஒண்ணும் சொல்லாம தின்னுட்டுப் போறதுக்கு அவரு உன்னோட புருஷன். பாவம் வாயில்லாப் பூச்சி.”
“ஏண்டா அவரைப் போயி வாயில்லாப் பூச்சினு சொல்றீயே?”
“ஆமாம் வாயிருந்தாதான் உப்பு இல்லாதது தெரிஞ்சிருக்குமே..!”
நான் “ங்ஙே” என்று விழித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு உப்புக்கு இத்தன வீர வசனங்கள் பேசி உங்க அம்மாவை ரொம்ப படுத்திடிங்க போல...
ReplyDeleteஹா ஹா ரசிச்சேன்...
நீங்களும் ரசிச்சு பதிவிட்டிருகிங்க....
வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி
நிஜமாலுமே உப்புப் பெறாத விஷயம்தான்.
ReplyDeleteஉப்புமாவில் உப்பு குறைவானதற்காக சண்டை. பேச்சுக்கு பேச்சு அந்த 11 வயது மகன் கவுன்டர் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த மாதிரி வீட்டுச் சண்டைகளில் உலகப் போரை விட சுவராஷ்யங்கள் அதிகம் என்பதை உங்களைப் போலவே நானும் தெரிந்து வைத்திருப்பதால் நானும் கவனிக்க ஆரம்பித்தேன். நம்மால் அது மட்டும்தானே முடியும்.
உப்பும் போதாது. தைரியமும் போதாது..
SEMA SEMA
ReplyDeleteHA...HA..HHA
for this salt matter, your son discussing a zoology...
ReplyDelete// என்னால் முடியாதது எல்லாம் என் மகனால் எப்படி முடிகிறது என்ற வியப்பில் அந்த சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.. //
ReplyDeleteசில நேரங்களில்.. ஒரு சின்ன சந்தோசம்....
@தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி.
@இராஜராஜேஸ்வரி
//உப்பும் போதாது. தைரியமும் போதாது..//
செம காமெடி. நன்றி.
@பாவா ஷரிப்
ReplyDeleteநன்றி, பாவா.
@சுந்தரவடிவேலு
வீட்டுல zoology மட்டுமா என்னென்னவோ நடக்குது.
@முகில்
ReplyDelete//சில நேரங்களில்.. ஒரு சின்ன சந்தோசம்....//
தங்கள் வருகை...எனக்கு மிகப் பெரிய சந்தோசம்.