நனைந்த சிறகுகள்
பாரமாகிப் போனதால்
பறக்க முடியாமல்
நடந்து செல்லும்
பரிதாபப் பறவை அது!.
பாம்பு ஊர்ந்த
தடம் போல
வளைந்து நெளிந்து
செல்லும்
முடிவுறாப் பாதையில்
அதன்
பந்தயப் பயணம்.
இருண்ட வானம்
சூரியனை மறைத்து
காணாமல் போனது
திசைகள் எல்லாம்!
இன்னும்
தொடக்கப்புள்ளியிலேயே
தொக்கி நிற்கும்
பயணம்.
துப்பாக்கி ஓசை
ஒலித்த பின்னும்
ஓட மறுக்கும்
கால்கள்!
காலில்
கயிறு கட்டி
பின்னுக்கு இழுக்கும்
நினைவுகளை
புறந்தள்ளி
முன்னெடுத்துச்
செல்ல
கால்கள் தயாரில்லை!
இலக்குகளையாவது
பறவையை நோக்கி
ஓடிவரச் சொல்லுங்கள்..
பாவம் அது
ஜெயித்துவிட்டுப் போகட்டுமே!
இலக்குகளையாவது
ReplyDeleteபறவையை நோக்கி
ஓடிவரச் சொல்லுங்கள்..
பாவம் அது
ஜெயித்துவிட்டுப் போகட்டுமே!
மிகவும் இரசித்தேன் நண்பரே..
" இலக்குகள் எங்களை நோக்கி
ReplyDeleteஓடி வரச் செய்தால்.." எத்தனை
பூரிப்புக் கிட்டும்.
அருமையான கவிதை.
நம் வாழ்க்கையில் சில நேரங்கள் பந்தயப்பயணமாய் அமைந்துவிடுகிறது..
ReplyDeleteபுரவி போல் பாயும் கற்பனை.மிக நன்று.
ReplyDeleteத.ம.2
ReplyDelete