நேற்றைய புத்தகக் கண்காட்சியில் கூட்டம் அம்மியது. இதைப் போலவே மற்ற நாட்களும் இருந்தால் திருப்பூரில் ஒரு அறிவுப் புரட்சி வெடித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.
நேற்று மாலை உலககப்பட அரங்கில் சினிமாவைப் பற்றிய டாகுமெண்டரி போட்டார்களாம். அதை நான் தவறவிட்டுவிட்டேன். நான் போகும்போது துக்கம் என்கிற ஒரு குறும்படம் ஓடிக்கொண்டு இருந்தது.
ஜாதி இல்லைன்னு யார் சொன்னது. இன்னும் கிராமங்களில் போய்ப் பாருங்க..ஜாதி பிரமாதமா வளர்ந்துட்டு இருக்குன்னு சொல்லும் படம். ஒரு தலித் வீட்டில் சாவு விழுந்து விடுகிறது. அந்த சாவை விசாரிக்க வரும் கிராமத்துப் பஞ்சாயத்து தலைவர் சாவு வீட்டுக்குள் வராமல் தெருவில் நின்று கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட சாவு வீட்டுப் பெண்மணி வீதி வரை வந்து ஊர்ப் பெரியவரின் காலில் விழுந்து அவரது ஆறுதலை ஏற்கிறார். ஆனால் அந்தப் பெரியவரோ(?) அந்தப் பெண்மணி காலில் விழும்போது சட்டென்று ஓரடி பின்நகர்கிறார். தவறியும் கூட அந்தப் பெண்மணியின் கை அவரது காலில் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார். பெரும்பான்மையான கிராமங்களில் இந்த நிலைதான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கிறார் இந்த டைரக்டர் சிவா.
இந்தப் படத்தைப் பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் விமர்சனம் வந்திருக்கிறது.
அந்த டைரக்டர் பேசும்போது தனது சொந்த அனுபவம் என்று அவர் அதை விவரித்த விதம் அருமையாக இருந்தது. இந்தப் படத்தை ஒரு வக்கீல் அருமையாக விமர்சனம் செய்தார். என்னிடம் மைக் வந்த போது 'துக்கம் தொண்டையை அடைக்கிறது' என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்தேன்.
அடுத்ததாக சுபாஷ் எனும் புதுமுக டைரக்டரின் படம். இன்சூரன்ஸ் பணத்துக்காக தன சொந்த அண்ணனையே கொலை செய்து பெண்கள் பின்னாடி சுற்ற பைக் வாங்க திட்டமிடும் தம்பியின் கதை. இன்னும் தெளிவாகச் செய்திருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய படம். அவரின் கன்னி முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இவர் இன்னும் முயற்சி செய்தால் நிச்சயம் உயரங்களை எட்டுவார்.
அடுத்ததாக காசு என்கிற குறும்படம். அவினாசி சிவா என்று ஒருத்தர் நடித்து டைரக்ட் பண்ணி இருந்தார். செருப்பு தைப்பவர். காலையில் வந்து கடையை விரிக்கிறார். மாலை வரை யாரும் வருவாரில்லை. அர்ஜுனனின் பார்வை வீழ்த்தப்படும் பொருளின் மீதே இருப்பது மாதிரி அவருடைய பார்வை கால்களின் மீதே இருக்கிறது. பிய்ந்து போன செருப்பை ஒருவன் வீசி எறிந்து விட்டுப் போவது மனதை உருக்குகிறது. சரி இனி ஒன்றும் ஆவப்போவதில்லை என்று முடிவு செய்து பொருள்களை எடுத்து பையில் போடுகிறார். கடைசியில் ஒரு ஈயத் தட்டில் இருந்த தண்ணீரை கொட்டிவிட்டு தட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது தட்டில் பிச்சைக்காசுகள் வந்து விழுகிறது. ஒருவன் உழைக்கத் தயாராய் இருக்கும்போது ஆதரிக்காத உலகம் அவன் தட்டை தெரியாத்தனமாக ஏந்தும்போது ஆதரிக்கிறது.. அருமையாக இருந்தது. வெல்டன் சிவா.
அடுத்ததாக அமளி துமளி என்கிற படம். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தமையால் அதைப் பற்றி இங்கே வேண்டாம். இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர் நமது நண்பர்கள் தாண்டவக்கோனும் ரவிக்குமார் அவர்களும்.
பிறகு நானும் எனது மகன்களும் புத்தகக் கண்காட்சியில் புகுந்தோம். அங்கே காணக் கிடைத்த காட்சிகள்.....
எங்கேயும் எப்போதும் ஹீரோவாக இருப்பவர் நம்ம சுஜாதாதான்....
இறந்தும் வாழ்கிறார் இவர். இரந்தும் வாழ்கிறார் சிலர்.
அகம் புறம் அந்தப்புரம் எனும் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு புத்தகம். கிழக்குப் பதிப்பகம். விலை ரொம்ப அதிகமில்லை ஐநூறு என்று நினைக்கிறேன். வரலாறு முக்கியம்னு சொல்றவங்களுக்கு விலையெல்லாம் பெருசா?
புத்தகம் தேடும் குழைந்தைகள்....
கலைஞரின் குடும்ப புகைப்படம். ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் கலைஞரின் அபூர்வப் புகைப்படங்கள் நூலிலிருந்து...
குடும்பப் புகைப்படம் போட்டு ஆட்சியை தூக்கினது ஆனந்தவிகடன்தான்.
தலைவரின் மாஸ்டர் பீஸ்..
இது எந்தக் குழந்தை...
"அருகிலேயே இருந்தாலும்
கை வர மறுக்கிறது
அடுத்த நொடியின் ரகசியம்"
சிந்தனின் அருமையான கவிதை...

கமலின் அபூர்வப் புகைப்படம். புத்த பிட்சுவாய்.. மணா எழுதிய கமல் பற்றிய நூலில் இருந்து...
கலைஞரும் எம்.ஜி.ஆரும்..