PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Sunday, October 30, 2011

ரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)


து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி-2011- க்காக  எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்லோரும் ஜெ.வுக்கு குத்தின மாதிரி எனக்கும் கொஞ்சம் குத்திட்டு போங்க... பிடிக்கலைன்னா ஆட்டோ அனுப்பிவிடுங்க, வரேன்.  நேர்ல வச்சு கைப்புள்ளைய கவனிச்ச மாதிரி கவனிச்சி விடுங்க...இதல்லாம் நமக்கு புதுசா அப்பு.ங்கு,விஷ்ணு,சாமி,வில்லி எனப்படும் வில்லயம்ஸ் நால்வரும் திருப்பரங்குன்றத்தை நோக்கி அவர்களுக்கு நேரப் போகும் அபாயத்தைப் பற்றி சிறிதும் அறியாமல் கேலியும்-கிண்டலுமாக, தண்ணியும்-மப்புமாக காரில் போய்க் கொண்டிருந்தனர்.

 இவர்கள்...மதுரையில் அரசரடியில்  உள்ள அர்னால்ட் ஜிம் க்ளப்-ல் தினசரி தங்களது உடம்பை கொஞ்சம்....கொஞ்சமாக இறுக்கி பழனிமலைப் படிகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர்.   ரங்கு ஐந்து, சாமி ஆறு படிகளையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  வில்லியோ இதிலென்ன வஞ்சனை என்று பத்துப் படிகளுக்கு முயற்சிசெய்து கொண்டிருக்கிறான்.

மாஸ்டர்,  தண்ணீர் கூட அளந்துதான் குடிக்கவேண்டும் என்றதால் பாரில் இருக்கும்போது சின்சியராக அளந்தூ அளந்தூதான்  குடிப்பார்கள். 

விஷ்ணுவுக்கோ இந்த பேராசை எல்லாம் கிடையாது.  இருக்கின்ற ஒரே தொந்தியை எப்படியாவது குறைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறான்ஆனால் எத்தனை அடி அடித்தாலும் அந்த இமயமலை கொஞ்சம் கூட அசையமாட்டேன் என்கிறது.

காலையில் ஜிம், பகலில் நகர்வலம், மாலையில் மீனாட்சிஅம்மன் கொவிலில் ஃபிகராபிஷேக பூஜை, இரவு பாரில் ஜலக்ரீடைஇப்படிப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

 இவர்களுக்கு காவல் துறையில் சேர்ந்து நாட்டுக்காக டீ....ஸாரி.....கடமை ஆற்ற வெண்டும் என்பதே வாழ்க்கை லட்சியம்.

இதில் ரங்கு...அவனது முழுப்பெயர் கோகுலரங்கனாதன்ரங்கனாதன் என்பது அவனின் அப்பா அவரது அப்பாவை மறக்காமல் இருப்பதற்காக வைத்த பெயர்ஆனால் வைத்ததோடு மறந்துவிட்டது வேறு விசயம்அவனை கோகுல் என்றுதான் அழைக்கிறார்கள்ஆனால் நண்பர்கள் வட்டத்தில் மறக்காமல் ரங்கூ...என்றுதான் ஆசையாக(?) அழைக்கிறார்கள்இது அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. தன்னை எஸ்.பி.கோகுல் என்று அழைக்கவே சொல்லுவான். அப்போதுதான் தன்னுடைய லட்சியம் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதியும் என்பான். விஷ்ணுவோ அதென்ன மரம்......இதுவரை நான் பார்த்ததில்லையே என்பான்.  

விஷ்ணுவுக்கோ தமக்கு தொந்தி இடிப்பதால், 'நீங்கெல்லாம் போலீஸ் ஆகிக்கங்கெடாநான் உங்களுக்கு இன்ஃபார்மர் ஆகிடறேன்'-என்பான்.   எல்லோரும் அவனைஇன்ஃபார்மர் விஷ்ணு என்றே அழைத்தார்கள் இதற்காக அவ்வப்போது  'நீ மட்டும் இல்லையென்றால் நான் ஐ.ஜிஆகிவிடுவேன்'-என்று தொந்தியோடு பேரம் பேசுவான்.   ஆனால் தொந்தியோ இதுக்கெல்லாம் மசியாது  நாளொரு கொழுப்பும் பொழுதொரு மடிப்புமாக வளர்ந்துகொண்டுதானிருந்ததுதொந்தியைக் குறைக்க அவனும் அவனது மாஸ்டரும்-மாஸ்டர் ப்ளான் போட்டார்கள்ப்ளானின் ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினை.  முதலில் பீரை தள்ளி வைக்கச் சொன்னார்ஆனால் அவனால் மாஸ்டரை மட்டுமே தள்ளி வைக்க முடிந்ததுஇவனை விட்டால் ஜிம்முக்கு வருமானம் போய்விடுமே என்று மாஸ்டரும்-‘மாஸ்டர் ப்ளானைத் தள்ளி வைத்தார்.

சாமிகூட சொல்வான்டேஉன்னோட தொந்திக்கு பேசாம நீ போலீஸ் ஏட்டாகிடு”-என்று.   ஆனால் விஷ்ணுவுக்கு அதில் கொஞ்சம் கூட  சம்மதமில்லை'ஆனால் ஐ.ஜிஇல்லையெனில் இன்ஃபார்மரே ' போதும்.

சாமிக்கு எஸ்.ஆனால் போதும்லஞ்சம் வாங்காமல் நேர்ர்ர்ர்ர்ர்மையான எஸ்.ஐ என்று பேர் வாங்கவேண்டும்அப்புறம் அப்படியே ப்ரொமோசனில் ஒவ்வொரு படியாக மேலே வந்துவிடவேண்டும்சாமி திரைப்படம்  த்ரிஷா மாதிரி எதாவது காலேஜ் பொண்ணை கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வில்லன்களை துரத்தி துரத்தி அரிவாளால் (மதுரையாச்சே...) வெட்டவேண்டும். அதற்காகவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பீரில் முகம் கழுவி ப்ராக்டீஸ் செய்து கொள்வான். அவ்வப்போது வில்லன்களிடம் தொடையைத் தட்டி சவால் போடவேண்டி இருக்கும் என்பதால் மாஸ்டரிடம் சொல்லி தொடைக்கு தனியாக எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கிறான்எஸ்.எஸ்.ம்யூசிக் சானலில் பூஜாவிடம் ஃபோன் பண்ணும்போதெல்லாம்கல்யாணம்தான் கட்டீக்கிட்டு ஓடிப்போலாமா-பாட்டையே கேட்பான்இதனால் அந்த சானலில் இவனது நம்பரையும், பாட்டையும் ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள் 

வில்லியம்ஸ்-ஒரு காக்க..காக்க சூர்யா மாதிரி என்கவுன்டர் போலீஸ் ஆகவேண்டும் என்பதே அவனது ஆசைஅந்தப் படம் பார்த்ததிலிருந்து மதுரையில் இருக்கும் ரவுடிகள் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறான்.  இன்னும் முழுமை பெறவில்லை.  இங்குதான் தினம் ஒரு ரவுடி பிறந்து வளர்கிறானே.  எவனைக் கேட்டாலும் ஆம்வே ஏஜன்ட் மாதிரி நானே ஒரு ரவுடிதானே என்கிறார்கள்.   C.S.I ஸ்கூல் முன்னாடி நின்று நளினி மிஸ்ஸுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறான்ஆனால் அவளோ இவனை ஒரு மனுசனாகக்கூட வேண்டாம் ஒரு குப்பைத்தொட்டியாகக் கூட மதிக்க மாட்டேன் என்கிறாள்.

ப்போது இவர்கள் போய்க் கொண்டிருப்பது திருப்பரங்குன்றத்திற்குத்தான்தினமும் மீனாட்சி ஆத்தாவையே பார்த்து பார்த்து புளித்துப்போனதால் ஒரு மாற்றத்திற்காக முருகப்பெருமானை(?) காண வந்திருந்தார்கள்

காரை அடிவாரத்தில் பார்க் செய்துவிட்டு நால்வரும் மெதுவாக படியேறினார்கள்.  ரங்குவுக்கு வயிற்றுக்குள் போயிருந்த வ-பிராந்தி அதாங்க குவாட்டர் பிராந்தி தனது கடமையை செய்து கொண்டிருந்தது. காலைப் பின்னி...பின்னி ஃபேசன்டிவி பெண்கள் போல பூனைநடை நடந்தான் 

வில்லியோ தெருநாய் நடப்பது மாதிரி நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்தான்கொஞ்ச நேரத்தில் படிகளிலேயே குப்புறப்படுத்துவிட்டான்விஷ்ணு அவனை எழுப்பி எழுப்பிப் பார்த்தான். அவன் அசைவதாகத் தெரியவில்லை. அவனின் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வைத்துவிட்டு நெற்றியில் திருநீரைப் பூசிவிட்டான்அசலில் பார்ப்பதற்கு பக்திபரவசத்தில் குப்புறவிழுந்து முருகனை சேவிப்பது போலிருந்ததுவில்லியம்ஸ் எனும் சுத்த கிருஸ்துவனை டாஸ்மாக்  எனும் மந்திரம்  சுத்த சீனிவாசராமானுஜம் ஆக்கியிருந்தது. 

சாமியும் ரங்குவும் அங்கிருந்த குரங்குகளோடு பேசிக்கொண்டிருந்தனர்.  அவைகள் இவர்களிடம் குடிக்க-கடிக்க ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்தன.  சாமி குரங்குக்கு தன்னால் இதுதான் தரமுடியும் என்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். குவாட்டருக்கே தாங்காதவனெல்லாமா நமது எதிரியா-என  அவை அவனை ஒரு குரங்காகக்கூட மதிக்கவில்லைபின்னே மனுசனுக்குத்தான்-மனுசன்-என்கிற மரியாதைகுரங்குகளுக்கு-குரங்கு-என்றால்தான் நல்லமரியாதை

நாலைந்து குரங்குகள் ரங்குவின் கையிலிருந்த சைட்-டிஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்காக அவனை ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தன. விட்டால் அந்தக் குரங்குகள் மெயின் டிஸ்ஸே கேட்கும் போலிருந்தது.   
அவனும் குரங்குகளுக்கு நல்ல கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்தான்

டே..சாமி இதுகதாய்ண்டா..நமக்கெல்லாம் தாத்தாடாஇதுகளுக்கு நாம ஏதாவது செய்திருக்கோமாடா…? நாம நன்றி கெட்ட நாய்ங்கடாஇல்லல்லநன்றி கெட்ட குரங்குடா.  ஏதாவது செய்யணும்டா…..-என்று அவனும் ப்ளாஸ்டிக் டம்ளர் ஒன்றை  பாறை மீது வைத்து இடுப்பிலிருந்த ஒல்ட்மன்க்-லிருந்து கொஞ்சமாக ஊற்றினான்ஒரு பெரிய கருங்குரங்கு மற்ற குரங்குகளை தள்ளி விட்டுக் கொண்டு முன்னால்வந்து ரங்குவைப் பார்த்து ஃப்ளைட்டிலிருந்து இறங்கிய தல போல தலையை லெஃப்ட்டும் ரைட்டும் ஸ்டைலாக ஆட்டியதுஓல்ட்மன்க்கோடு கலக்க தண்ணீர் தேடினான் ரங்கு
சாமி வாந்தி எடுப்பதில்தான் மும்முரமாக இருந்தான்

விஷ்ணு வில்லியோடு கபடி விளையாடிக் கொண்டிருந்தான்அவனுக்கு ஒரு பிச்சைக்காரன் உதவிக்கொண்டிருந்தான்இருவரும் வில்லியைத் தூக்கி ஓரமாக கிடத்திக் கொண்டிருந்தார்கள்.  


தண்ணீர் ஊற்றும் வரை பொறுமை இல்லாத அந்த தலகுரங்கு சடாரென தாவியதுதாவிய வேகத்தில் டம்ளரில் இருந்த திரவத்தை சிந்தியபடி வாய்க்குள் கவிழ்த்ததுஅதன் கசப்பு சுவை உணர்ந்திருக்கவேண்டும்.  ப்ர்ர்ர்ர்-என பல்லைக் காட்டியதுகுரங்கு மொழியில் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லைஅனேகமாகதண்ணி வெச்சியே தலைவாஊறுகா வெச்சியா? என்பதாகத்தான் இருக்கும்ஆல்கஹால் அதன் மூளையைத்  தாக்கியிருக்கவெண்டும் இப்போது தலைகால் தெரியாமல் குதித்ததுமரத்தின் மேலே ஏறி அங்கேயிருந்து அடுத்த மரத்துக்குத் தாவியது.

டேமாப்ளைஇங்க பார்டா….தாத்தாவுக்கு மப்பு ஏறிப்போய் மரம்,மரமா தாவுறாரு….
ரங்கு சந்தோஷமாகக் கூவினான்வாந்தியெடுத்து டய்ர்டாகிப் போன சாமி இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாரானான். ரங்கு தனது கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கி குரங்குக் கூட்டத்திடம் எறிந்தான். அதற்க்கு குரங்குகள் பங்காளிச்சண்டை போட்டுக்கொண்டன.  

இங்கு சாமியும் ரங்குவும் பாட்டிலுக்காக சண்டை போட்டுக்கொண்டனர். 

ருசி கண்ட கருங்குரங்கு இவர்கள் சண்டையின் இடையே பாய்ந்து தனக்கும் பங்கு கேட்டது.  ஆனால் சாமியும் ரங்குவும் கொஞசம்கூட மதிக்காததால் அவமானப்பட்ட கருங்குரங்கு ரங்குவின் தொடையில் தனது பற்களில் நான்கை ராஜராஜசோழன் கல்வெட்டு போல பதித்ததுஅய்யோவென அலறி ரங்கு அப்படியே உட்கார்ந்துவிட்டான்


சத்தம் கேட்டு விஷ்ணுவும் பிச்சைக்காரனும் வில்லியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ரங்குவின் தொடையிலிருந்து ஆஃப்சீசனில் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவது போல ரத்தம் கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்தது.
விஷ்ணு தனது கர்சீப்பால் காயத்தை சுற்றி கட்டுப்போட்டு ரத்தம் வழிவதை தடுத்தான்பிச்சைக்காரனை வில்லியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சாமியும் விஷ்ணுவும் ரங்குவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்


ஸ்பத்திரி மலை அடிவாரத்தில் தேரடிக்கு அருகில் இருந்ததுஉள்ளே போனபோது நான்கு பேர் வரிசையில் இருந்தனர்...கம்பவுன்டர் போல இருந்தவன் காதுகளைக் குடைந்து கொண்டேஎன்ன நாய் கடிச்சிடுச்சா?-என்றான்.

இல்லை குரங்கு கடிச்சிடுச்சு….

கேட்டவுடதும் இரண்டடி பின்வாங்கினான்
  
என்ன குரங்கா….?...அதுகிட்ட ஏன்யா...வெச்சுக்கிட்ட?

 ம்ம்ம்ம்….நேர்த்திக்கடன்-என்றான் விஷ்ணு.

 இப்படி இருந்தாகுரங்கு மட்டுமில்ல குதிரை,பன்னி,மாடுன்னு எல்லா ஜீவராசியும் கடிக்கத்தான் செய்யும்…..சரி..சரி அப்படி...உட்காரு-என்று பெஞ்ச்சை காட்டினார் கம்பவுண்டர்.

 பெஞ்ச்சின்  ஓரத்தில் ரங்கு அமரவைக்கப்பட்டான்பெஞ்ச்சில் அமர்ந்திருந்த வேறு இருவர் ரங்குவை வேற்று கிரகத்து ஆசாமி போல பார்த்துவிட்டு பக்கத்தில்  அமர்ந்திருந்தால் ஆபத்து என்று எழுந்து நின்றுகொண்டார்கள்.

 ஒருவன் கொரங்குக்கு என்ன ஆச்சுஇருக்காசெத்துப் போச்சா?...கூட்டிட்டு வந்திருக்கலாமே-என்றான்.

 விஷ்ணு,“ம்ம்ம்கொரங்கு பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கு..-என்றான்.

 உனக்கு இதுவும் வேண்டும்......இன்னமும் வேண்டும் என.....மேலும் நான்கடி தள்ளி நின்றுகொண்டான்.

 அப்போது அவர்கள் டாக்டரால் அழைக்கப்பட,  ரங்குவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர் விஷ்ணுவும் சாமியும்.

 டாக்டர்....பாலுமகேந்திரா மாதிரி தொப்பி போட்டிருந்தார்.  சோடாப் புட்டிக் கண்ணாடியோடு ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் பாம்பு மாதிரி சுற்றியிருந்தார்.  Dr.M.A.தர்மராஜ்M.B.B.S.....என்று பலகை சொன்னது.

 ரங்குவுக்கு அந்த போர்டைப்  பார்த்தால்  எமதர்மராஜா என்பது மாதிரியே தெரிந்தது. கையில் பாசக்கயிறும் எருமையும்தான் மிஸ்ஸிங்.

 சொல்லுங்கோஎன்ன ஆச்சு…?

 ஸார் குரங்கு...கடிச்சிடுச்சு

 கேட்டதும்....அதிர்ந்தார்கையில் க்ளவுஸ் எடுத்து மாட்டிக்கொண்டார்.   வீல் சேரில் கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்துக்கொண்டார். ஜூவில் மிருகத்தைப் பார்ப்பது போல ரங்குவையே.....பார்த்தார்.   நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.

வயசு என்ன இருக்கும்?” 

“25 ஆச்சு-ரங்கு. 

அட உனக்கில்லையா….குரங்குக்கு....என்ன வயசு இருக்கும்?

 என்ன வயசுன்னு.....கேட்டுக்கலை-சாமி சொன்னதும்....டாக்டர் அவனை முறைத்தார்.

 ஏன் மாடசாமி, நமக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி கேஸ் வந்திருக்கா..?

 ”இல்லை..ஸார்பாம்பு பார்த்திருக்கோம்..நாய் பார்த்திருகோம், கரப்பாம்பூச்சி,எலி கூட வந்திருக்கு….கொரங்கு இதான் பர்ஸ்ட்-என்றான் சித்திரகுப்தன் மாடசாமி.

ஏம்பாகுன்றத்துக் குரங்கெல்லாம்  சாதுவாச்சே…?-என்ற டாக்டர்  ஒரு டி.டி இஞ்ஜெக்சனும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார்நான்கு நாள் கழித்து வரச்சொன்னார்காயத்திற்கு ட்ரெஸ்ஸிங்க் பண்ணிவிடச் சொன்னார்.   குரங்கு செத்துவிட்டால் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

 ரங்குவை காரில் உட்காரவைத்துவிட்டு விஷ்ணு மலைமேலே போய் பிச்சைக்காரனைப் பார்த்து நூறு ரூபாயும் தனது செல் நம்பரையும் கொடுத்துவிட்டு குரங்குக்கு எதாவது ஆனால் தனக்கு தகவல் தரச் சொன்னான்கொஞ்சம் தெளிந்திருந்த வில்லியை கீழே கூட்டிவந்து கிளம்பினார்கள்.


கொஞ்ச நேரத்தில் சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்து ரங்குவை கலாய்க்க ஆர்ம்பித்திருந்தனர்.

 என்னதான் இருந்தாலும்.....உங்க தாத்தா இப்படி பண்ணியிருக்கக் கூடாது

 உங்க தாத்தாவுக்கு.....சரியா சோறு வெச்சிருக்க மாட்ட….அதனாலதான் கோவத்துல தொடைக்கறியை டேஸ்ட் பார்த்துட்டாரு

 ”சோறு வெச்சயே….தண்ணி வெச்சியா…..அதனாலதான் ஓல்ட்மன்க் பார்த்ததும் குஷியாய்டுச்சு….

 “ஓல்ட் மன்க்....என்பது ஒல்ட் மங்கி.....எல்லாம் ஒண்ணுதானேதன்னோட சொந்த ப்ராண்ட் அப்படிங்கிறதாலே  குரங்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடுச்சு

 இதையெல்லாம் கேட்ட ரங்கு ரொம்பவும் டென்சனாகிப் போனான். காருக்குள்ளேயே அவர்களைப் அடிக்க ஆரம்பித்தான். ஒரிஜினல் குரங்கு மாதிரி காச்மூச் என்று கத்தினான்.  அடிக்கடி இடுப்பில வேறு் சொறிந்துகொண்டான். 

டேய்அமைதியா இருங்கடா….நம்மை கடிச்சுவெச்சிட்டான்னா....அப்புறம் நமக்கும் இந்த கதிதான்என்று விஷ்ணு தாழ்ந்த குரலில் சொன்னான். 

அதன்பிறகு அனைவரும் அமைதியானார்கள்அப்படியே ரங்குவை வீட்டில் இறக்கிவிட்டு எல்லோரும் கிளம்பிப்போனார்கள். 


ரண்டு நாள் யாரும் ரங்குவைப் பார்க்க வரவில்லைஇப்படி இது வரை இருந்ததில்லைஃபோனிலாவது பேசிக்கொள்வார்கள்எதுவோ, என்னவோ நடக்கிறது?  ரங்குவுக்கோ இருப்புக் கொள்ளவில்லை, நண்பர்களுக்கு ஃபோனினான்.  யாரும் எடுக்கவில்லை.  சரி விஷ்ணு வீடு பக்கத்தில்தான் இருக்கிறதுபோய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.  

விஷ்ணு வீடு பூட்டி இருந்ததுரங்கு காம்பவுண்ட் சுவரேறி உள்ளே குதித்தான்விஷ்ணுவின் ரூம் மாடியில் இருந்ததுஅருகில் இருந்த அசோக மரத்தில் சரசரவென ஏறி மாடிக்குப் போனான்ஜன்னல் சட்டத்தை கழட்டி கிடைத்த சந்தில் உள்ளே புகுந்தான்எத்தனை முறை  நைட் லேட்டாக வந்த போது விஷ்ணு இதுமாதிரி ஏறியிருப்பான்.

 அறையின் உள்ளே ஒரு ஆஃபீஸ் டேபிள் இருந்ததுஅதன்மீது இரண்டு துண்டுச் சீட்டுகளும் ஒரு இரும்பு ஸ்கேலும் இருந்தது.

“Mr.கோகுல்...
S W H2 6F இதுதான் குறியீடு….கவனம்-விஷ்ணு

இன்னொன்றில்,

“Sir,எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்விஷ்ணு
என ப்ரிண்ட் ஆகி இருந்ததுரங்குவுக்கு தலை சுற்றியதுஒரு எளவும் புரியவில்லைரங்கு என்று சொல்லாமல் எதோ S.P.கோகுல் என்றாவது சொல்லி இருக்கிறானே என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 


தே சமயத்தில் விஷ்ணு கட்டபொம்மன்சிலை சிக்னலில் நின்றிருந்தபோது  பிச்சைக்காரனிடம் இருந்து ஃபோன் வந்ததுஅந்த கருங்குரங்கு செத்துவிட்டதாம்விஷ்ணுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வில்லி ஊரில் இல்லை.   சாமியைக் கூப்பிட்டான்.  
அவன் கால நேரம் தெரியாமல் -
சரிடாஎன்ன செய்யலாம்….ஒரு மாலைய வாங்கீட்டு சாவுக்குப் போய்ட்டு வந்துடலாம்”-என்றான். 

டேய்….கொஞ்சம் சீரியஸா....பேசடா….” 

மாப்ளஎன்னதான் இருந்தாலும் நம்ம ரங்குவோட தாத்தா....இல்லையா?” 

இல்லடா....ரங்குவை வேறு .நல்ல டாக்டரா பார்த்து கூட்டீட்டு போவோம்டா....எனக்கென்னவோ பயமாஇருக்குடா  

 “.கே.கவலைப்படாதே.....உடனே அவனை அழைச்சிட்டுப் போய் டாக்டர் மங்களேஸ்வரனை பார்த்துட்டு வந்துடலாம்நீ ரங்குவைக் கூட்டீட்டு நேரா ஆஸ்பத்திரி வந்துரு.  நான் முன்னாடியே....போயிடறேன்.  ஆஸ்பத்திரி அட்ரஸ் தெரியும்தானே?

 ”தெரியும்....நான் ரங்குவோட வந்துடறேன்...

 ரங்குவை ஃபோனில் அழைத்தான்.


ங்கே…..ரங்கு சேரில் அமர்ந்து துண்டுச் சீட்டுக்களொடு மல்லுக் கட்டிகொண்டிருந்தான். அப்போதுதான்ரங்குவின் ஃபோன் ஒலித்ததுஅவன்தான்….விஷ்ணு….இன்ஃபார்மர் விஷ்ணு. 

"சொல்லுடா..." 

"டே..மாப்ள....இப்போ நான் வீட்டுக்கு வரேன்.  ரெடியா இரு...டாக்டரை பார்த்துட்டு வந்துரலாம்..." 

"ரெண்டு நாளா எங்கடா போயிருந்தீங்க எல்லோரும்...." 

“அதெல்லாம் வந்து பேசிக்கலாம்டா..."

 "நான் இப்போ உன் வீட்டுல.... உன் ரூமுலதான் இருக்கேன்...."

 "என் வீட்டுலயா....டே..அங்க யாரும் இருக்க மாட்டாங்களே...எல்லோரும் திண்டுக்கல் வரைக்கும் போயிருக்காங்கடா...." 

"உன் டேபிள் மேல இருந்த message எல்லாம் பார்த்துட்டேன்....."  

"டே...டே....மாப்ள....அதெல்லாம் ஒண்ணும் இல்லடா...நீ அங்கேயே இரு....இப்போ வந்துடறேன்...." 

போன் துண்டிக்கப்பட்டது.  வாடா வா..வந்து என்ன சமாதானம் சொல்லப் போகிறாய் என்று பார்க்கிறேன்.
  
சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான் விஷ்ணு.  

"ஏண்டா இப்படி மரமெல்லாம் ஏறி...கஷ்டப் படற.  ஒரு போன் பண்ணியிருந்தா....உடனே வந்திருக்க மாட்டேனா.."

"போன் பண்ணாதான்...எடுக்கவே மாடேங்கறிங்களே...?  அதனாலதான் இப்படி வந்தேன். சரி அதெல்லாம் கெடக்கட்டும்....இதென்ன குறியீடு..அது இதுன்னுட்டு.  எனக்கு தெரியாம.....என்னவோ நடக்குது போலிருக்கு....?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.  இத பார்....கொஞ்சம் உட்காரு...இந்தா தண்ணி குடி.  ரிலாக்ஸ் பண்ணிக்க.  இப்ப நான் சொல்லப்போறதை கேட்டுக்க.  குரங்கு கடிச்சதால.....கொஞ்சம் டென்சன் ஆயிட்டியா...நாங்க உன் கூட இருந்தா உன்னை அந்த குரங்கு மேட்டர வச்சே கலாய்ச்சிட்டு இருப்போம்.  அதனால உனக்கும் மெண்டல் பிரசர்  ஆயிடுது.  அதனாலதான் உன்னை ரெண்டு நாளைக்கு தனியா விட்டுடரதுன்னு  பிளான் பண்ணுனோம்.  அதை தவிர வேற ஒண்ணும் இல்லடா மாப்ள." 

"அப்புறம் இந்த துண்டுச்சீட்டுக்கெல்லாம்.....என்ன அர்த்தம்... சொல்லு" 

 “இதெல்லாம் நான் இன்பார்மர் ஆனா எப்படி ஷார்ட்டா உங்களுக்கு  message அனுப்பறதுன்னு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேண்டா" 

"சரி இதுக்கு என்ன அர்த்தம்...S W  H2 6F" 

"இதுவா...இதுகூட உனக்கு புரியலையா...நீ எல்லாம் எஸ்.பி.ஆகி பாழாப்போச்சு போ....  S-south,W-way,6F-6figure,H2-2figurehot... மீனாட்சிஅம்மன்கோவில் தெற்குவாசல்ல ஆறுபொண்ணுக இருக்காங்க.....அதுல ரெண்டு பொண்ணுக சூப்பரு...ன்னு அர்த்தம்.  இதுகூட புரியலையா...நீ எல்லாம் சைட் அடிச்சு கிழிச்சபோ?"

"அது ஏன்.....எனக்கு தப்பான குறியீடு..?" 

"உனக்குத்தான்....உடம்பு சரி இல்லையா...அதனாலதான்...தப்பான குறியீடு.  இருந்தாலும் நான் யாருக்கும் அனுப்பலை.  இதுதான் மேட்டரா..ஓகே இப்ப கோவம் தணிஞ்சுதா.  வா டாக்டரைப் பார்க்கலாம்.  இன்பார்மரா ப்ராக்டீஸ் பண்ணவே விடமாட்டீங்கப்பா.  உங்களுக்கு ஸார், மோர்னு மரியாதை வேற.... பொறம்போக்கு பசங்க." 

'த்தூ'-வென காறித்துப்பிவிட்டு அவனோடு ஆஸ்பத்திரி கிளம்பினான் ரங்கு.  


டாக்டரின் ரூம் இரண்டாம் மாடியில் இருந்தது.  

அங்கே சாமி ரெடியாக இருந்தான்.  இவன்தான் கடைசி பேஷன்ட்....கொஞ்ச நேரத்தில்  உள்ளே அழைக்கப் பட்டான். 

டாக்டர்.மங்களேஸ்வரன்...அதற்குப் பிறகு என்னென்னவோ ஏ,பி,சி,டி-என..எழுதி இருந்தது.

 டாக்டர்....கண்ணாடியை இறக்கிவிட்டு சரித்திரம் பூகோளம் கேட்டார்.

"இப்ப அந்த குரங்கு செத்துப் போய் விட்டது..."-என்கிற செய்தியையும் அடிசனலாக சொல்லப்பட்டது.
இதை கேட்டதும் ரங்கு அதிர்ச்சியாக...விஷ்ணுவைப் பார்த்தான். 

"டோன்ட்வொர்ரி...குரங்கு ஒண்ணும் விசஜந்து கிடையாது.  அதுவும் நம்மைப்போல ஒரு உயிர்தான்.  ரேபிஸ் என்கிற நோய் நாய்,வவ்வால் போன்ற மிருகங்களுக்குத்தான் வரும்.  குரங்குக்கு வர சான்சே இல்ல.  அதனாலே பயப்படாதீங்கோ.  இங்க பாருங்கோ ..."-என்று தனது  முழுக்கை சட்டையை முழங்கை வரை உயர்த்தினார். 

அங்கே ஒரு இரண்டு இன்ச்சுக்கு வெட்டுக் காயம் ஆகி,  ஆறி தழும்புபோல இருந்தது.  

"இது பத்து வருடங்களுக்கு முன்னால என்னை ஒரு குரங்கு கடிச்ச தழும்பு.  இதுவரை எனக்கு ஒண்ணும் ஆகலையே?  இப்பக் கூட பாருங்க நல்லாத்தானே இருக்கேன்.  ஸோ பயப்படாதிங்க.  நார்மல் டிடியும் ஆண்டிபயாடிக்கும் போதும்...ஒண்ணும்....பிரச்சினையில்லை..." 

அவ்வப்போது.....இடுப்புக்கு கீழே சொறிந்து...கொண்டார். 

மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு மூவரும் கீழே இறங்கி வர லிப்ட் இருக்கிறதா என்று பார்த்தனர்.  இல்லை.   படியிலேயே மூவரும் இறங்கி வந்தனர்.
 போர்டிகோவைத் தாண்டும்போது,  அருகில் இருந்த அசோக மரத்திலிருந்து யாரோ இறங்குவது மாதிரி தெரிந்தது.  இறங்கியவர் சாவகாசமாக சென்று தனது ஸ்கூட்டரை ஒரே உதையில் உதைத்து ஸ்டார்ட் செய்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.....டாக்டர்....மங்கி எனப்படும் மங்களேஸ்வரன். 
டிஸ்கி:  இந்தக் கதை பதிவுலகில் எழுதப்பட்ட 78 கதைகளில் பெஸ்ட் 15 க்குள் தேர்வாகி ஆறுதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பரிசுப்போட்டி முடிவுகள் இதோ இங்கே சுட்டிப் பாருங்கள்.


ஆதரவளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

39 comments :

 1. மாலையில் மீனாட்சிஅம்மன் கொவிலில் ஃஃபிகராபிஷேக பூஜை. //

  அருமையான நகைச்சுவை கதை.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது....../

  வெண்புரவிக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. நல்லா இருக்கு..
  1500 வார்த்தைகள தாண்டிடிச்சோ ?

  ReplyDelete
 4. Vaai vittu sirithen, nalla nagaichuvai!

  ReplyDelete
 5. @Madhavan srinivasagobalan...
  இல்லை சரியாக 1500 வார்த்தைகள் இருக்கும்படி செய்துவிட்டேன். நன்றி மாதவன்.

  ReplyDelete
 6. @பெசொவி
  நன்றி..மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @ மனோ
  நன்றி...மிக்க நன்றி மனோ.

  ReplyDelete
 8. வாழ்த்துகள்!

  மற்றவங்க...அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க.. காதல் ஒரு பட்டாம்பூச்சி (சவால் சிறுகதை-2011)

  ReplyDelete
 9. arumai... vetri pera vazhththukkal.

  ReplyDelete
 10. கலக்கல் சார்... அனேகமா அடுத்த வருஷம் சவால் சிறுகதை போட்டி வைக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.. ஆளாளுக்கு செம லந்து விட்டிருக்கோம்.. நீங்க, நான், பன்னிகுட்டி, பிச்சைக்காரன், வெளங்காதவன், நாய்-நக்க்ஸ், ஜகமணி கதையெல்லாம் படிச்சா தேர்வுக் குழுவினர் அனேகமா ஜெர்க் ஆகப் போறாங்க

  ReplyDelete
 11. சிறு குறியீட்டை வைத்து புரவி ஒரு நகைச்சுவை உலாவே நடத்தி விட்டது..
  வாழ்த்துகள்!!

  ReplyDelete
 12. வித்தியாசமாக நகைசுவையான போக்கில் கதை.வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. இப்படியும் யோசித்து அருமையா எழுத முடியுமா ஆஹா புரவி எல்லாரையும் முந்தும்போல்ருக்கே வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள்,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. இப்படியெல்லாம் யோசிக்க நான் ஒரு டிப்ளமா கோர்ஸ்தான் சேரனும்! நண்பர்கள் மத்தியில் இருந்தது போல் ஒரு அனுபவம்! :)

  ReplyDelete
 16. venpuravi aruna sir.. i felt surprised of your humor sense... the only thing.. just you try to edit your spellings.. best of luck..

  ReplyDelete
 17. i felt surprised of yr humor sense aruna sir..
  just u try to edit some spellings.. and everything will be get ok. best of luck..

  ReplyDelete
 18. வாய்ப்பே இல்லைங்க. இந்த அளவு யோசிக்கமுடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன். இந்த முற்றுப்புள்ளி விசயத்துல மட்டும் கவனம் செலுத்தினா கண்டிப்பா மிகச்சிறந்த கதையா இருக்கும். என் நண்பர்களுக்கும் உங்களின் கதையை அறிமுகம் செய்கிறேன். இவ்ளோ நேரம் சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றிங்க. அப்படியே புக்மார்க் போட்டுக்கிறேன். அடிக்கடி படிக்கலாம்!

  ReplyDelete
 19. ரொம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்........ய கதையா எழுதிட்டீங்க போல.ஜாலியா போகுது :)

  ReplyDelete
 20. யுடான்ஸ் ஓட்டு 9 :)

  ReplyDelete
 21. @Vijayashankar
  @S.Kumar

  நன்றி...நன்றி கோடிகள் உரித்தாகுக....

  ReplyDelete
 22. @suryajeeva
  இதுதான் சவால் சிறுகதை....உண்மையில் சவால் நமக்கில்ல...அவர்களுக்குத்தான்.

  ReplyDelete
 23. @Guru pala mathesu
  @ஆளுங்க (AALUNGA)

  மிக்க நன்றி...குரு, ஆளுங்க.

  ReplyDelete
 24. @asiya omar
  நன்றி ஆஸியா.

  ReplyDelete
 25. @நம்பிக்கைபாண்டியன்
  @ஷைலஜா
  @asksukumar

  மிக மிக நன்றி நண்பர்களே...

  ReplyDelete
 26. @sundaravadivelu

  தங்கள் பகிர்வுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சுந்தரவடிவேலு.
  தவறுகளை திருத்திவிட்டேன்....என நினைக்கிறேன்.

  ReplyDelete
 27. @கோமாளி செல்வா
  // என் நண்பர்களுக்கும் உங்களின் கதையை அறிமுகம் செய்கிறேன். இவ்ளோ நேரம் சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றிங்க. அப்படியே புக்மார்க் போட்டுக்கிறேன். அடிக்கடி படிக்கலாம்!//
  இந்த பதவிக்கு மிகவும் நன்றி....

  ReplyDelete
 28. @raji
  நான் காசு கொடுக்காமல், கும்பிடு போடாமல் தொண்டை வரள கத்தாமல் நீங்கள் பூட்ட ஓட்டுக்கு மிகவும் நன்றி ராஜி.

  ReplyDelete
 29. அருமை அண்ணே இந்த கோணம் வித்தியாசம், அதவிட எங்க ஊரை சுத்தி காமிச்சதுக்கு உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 30. இப்படியும் இந்த புகைப்படத்துக்கு கதை எழுத முடியுமா?? அற்புதமா எழுதியிருக்கிங்க சார்... வெற்றி பெற வாழ்த்துகள்...

  ReplyDelete
 31. அருமையான நகைச்சுவை நடை! really superb:)வாழ்த்துகள்.
  வந்துட்டு இதபார்க்காம போய்டீங்களே. http://mugaavari.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 32. @ ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  //அதவிட எங்க ஊரை சுத்தி காமிச்சதுக்கு உங்களுக்கு நன்றி//
  உங்க ஊர்தான் வரலாற்று சிறப்பு மிக்கதாச்சே...யாராவது புறக்கணிக்க முடியுமா?

  ReplyDelete
 33. @சரவண வடிவேல்.வே

  நன்றி சரவணா வடிவேல்... உங்கள் பெயரில் எனது ஆருயிர் நண்பர் இருவர் பெயரும் அமைந்திருப்பது மிகவும் விஷேசம்.

  ReplyDelete
 34. @ponraj ramu said.
  நன்றி பொன்ராஜ்.

  ReplyDelete
 35. நகைச்சுவையான நடை பிடித்தது. எழுத்துப் பிழைகளை சரிசெய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. // அவை அவனை ஒரு குரங்காகக்கூட மதிக்கவில்லை. பின்னே மனுசனுக்குத்தான்-’மனுசன்’-என்கிற மரியாதை. குரங்குகளுக்கு-’குரங்கு’-என்றால்தான் நல்லமரியாதை. //

  intha mathiri egappta dialogs sollalam..ellamay sema comedya irukku...nala narration...story konjam perusu mathiri thonuchu but bore adikkala...

  ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......