எய்ட்ஸ் எனும் மாய நோய்.
சில மாதங்களுக்கு முன்பு நண்பர் சங்கர் ஒரு குறும்படம் எடுத்தார். அது எய்ட்ஸ் பற்றிய மெசேஜ் கொண்ட ஒரு திரில்லர் படம். அந்தப் படத்திற்காக ஒரு மேன்சன் பில்டிங் வேண்டும் என்று கேட்டார். நான் ஒரு நண்பரிடம் உதவி கேட்டேன். அவரும் அவர் தங்கியிருந்த மேன்சன் முதலாளியிடம் அனுமதி பெற்ற பின்னர் எங்களை வரச் சொன்னார்.
நாங்களும் தட்டுமுட்டுச் சாமான்களோடு கொஞ்ச நேரத்தில் ஆஜர் ஆனோம். ஒரு ரூமைக் கைப்பற்றி அதை தங்கள் வசம் ஆக்கிகொண்டனர் படப்பிடிப்பு குழுவினர். எல்லா ஏற்பாடுகள் முடிந்து காமிரா கோணம் பார்த்து நடிப்பு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த மேன்சன் முதலாளி வந்தார். டைரக்டரை அழைத்து கதையைக் கேட்டார். டைரக்டர் சங்கரும் ரொம்பவும் சின்சியராக அவரை அமர வைத்து முக பாவங்களோடு கதை சொல்லிக்கொண்டு இருந்தார். கதையில் எய்ட்ஸ் என்ற வார்த்தை வந்ததுமே போதும் என்று சொன்னவர் உடனே 'பேக்கப்' சொல்லிவிட்டார். டைரக்டர் பிதுக் பிதுக் என்று முழிக்கிறார். என்னடா நாம் சொல்லவேண்டிய வார்த்தையை இவர் சொல்கிறாரே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.
நாங்கள் அவரை சமாதானப் படுத்தும் நோக்கத்தில் சென்று அவரிடம் பேசினால், அவர் நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
"இல்லைங்க இந்த மாதிரி படம் இங்க எடுக்கக் கூடாது" -என்று கீறல் ரெக்கார்ட் மாதிரி இதையே திருப்பி திருப்பி சொன்னார்.
நாங்களும்,"உங்ககிட்ட அனுமதி வாங்கித்தானே நாங்கள் இங்கே வந்தோம்?" என்றோம்.
"நான் ஏதோ சின்னப் பசங்களுக்கு படம் எடுக்கறீங்கன்னு நினைச்சேன்"-என்றார்.
எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. எங்களை வெளியே அனுப்பி கதவைச் சாத்திவிட்டுத்தான் சென்றார்.
எய்ட்ஸ் என்றால் இவ்வளவு விழிப்புணர்வா(?) என்று ஆச்சர்யப்பட்டோம்!!!!