PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு-தமிழனின் சரித்திரம்.


மிழகத்தில் இருந்து களவு போன சமாச்சாரங்கள் ஏராளம் உண்டு. மஞ்சள் போன்ற நாம் விட்டுக்கொடுத்த பாரம்பரியம் மிக்க அரிய செல்வங்களை நமக்கே வியாபாரம் செய்யும் கார்பரேட் கம்பனிகள் இன்று நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.



நமது முன்னோர்களின் வரலாற்றுக்குள் புதைந்து போயிருக்கும், மறைக்கப் பட்ட செய்திகள் ஏராளம். சீனா என்றால் குங்பூ கலைதான் நினைவுக்கு வரும். அதனாலேயே சீனா செய்யும் அலப்பரைகள் அளவிடமுடியாதவை. ஆனால் அந்தக் கலை இந்தியாவிலிருந்து அதுவும் தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரத்திலிருந்து பொனது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

இந்த நூலைப் பிடித்துக்கொண்டு இடைஇடையே நோக்கு வர்மம், மரபியல் ஆராய்ச்சி என மசலா தூவி ஒரு விருந்தை படைத்திருக்கிறார் முருகதாஸ்.




போதி தர்மர்-1600 வருடங்களுக்கு முன்பு பல்லவர் குலத்தில் தோன்றிய, மருத்துவம், களரி, வர்மக்கலை கற்று தேர்ந்த அரசிளங்குமரன். புத்த மதத்தை தழுவி சீனா சென்று அங்கு கொள்ளை நோய் கொன்று அந்த மக்களுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுத்து மருத்துவமும் கற்றுத் தந்து உலகப் புகழ் பெற்ற ஷாலின் டெம்பிளை நிறுவினார் போதி தர்மர் எனும் டேமூ எனும் பல்லவ மன்னன்.

தாயகம் திரும்பும் சமயத்தில் சீனர்கள் சுயநலம் நோக்கம் கொண்டு நஞ்சு கலந்த உணவை கொடுத்தனர். அதில் விசம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டே(????) அவர்களின் விருப்பத்தை உணர்ந்து அதை நிறைவேற்றி தெய்வமானார். அன்று தான் கற்றுக் கொடுத்த கலை இன்று உலகம் முழுவதும் பரவி நின்றாலும் அந்த உண்மையான மூலம் இன்று மறைக்கப் பட்டு தமிழனுக்குச் சேர வேண்டிய க்ரிடிட் வராமலே போய்விட்டது.

இப்போது கதை தற்காலத்தில் பயணிக்கிறது. சுபா (ஸ்ருதி) எனும் இளம் ஜெனட்டிக் இஞ்சினீயர் தனது ஆராய்ச்சியில் மூதாதையர்களின் D.N.Aவோடு அவரது வம்சாவழியின் D.N.Aவை கலக்கும்போது மூதாதையரின் அத்தனை திறமைகளையும் திரும்பக் கொண்டுவரமுடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஆராய்ச்சிகளை சீனா, ஜெர்மன், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.


இதைக்கண்ட சீனா இது தனக்கு இடையூறாக இருக்கும் என்று சுபாவைக் கொல்ல முடிவு செய்து டாங்லீ எனும் ஷாலின் டெம்ப்ளினின் சிறந்த மாணவனை அனுப்பி வைக்கிறது. அது போக ‘ஆபரேசன் ரெட்’ எனும் கொடிய கொள்ளை நோயை இந்தியாவில் பரப்பும் திட்டத்தையும் செயல்படுத்தும் பொறுப்பையும் தருகிறது. அவனுக்கு நோக்கு வர்மம் எனும் ‘மைண்ட் கன்ட்ரோல்’ கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். அந்தக் கலையின் மூலம் யாரொருவரையும் அவன் வசம் கொண்டு வந்து தனது வெலைக்காக உபயோகித்துக் கொள்ள முடியும். இதுவும் போதி தர்மரின் சொத்தே.

இந்தியாவுக்கு வரும் டாங்லீ சுபாவை கொல்ல துடிக்கிறான். சுபாவோ தனது ஆரய்ச்சிக்காக போதிதர்மரின் வம்சாவழி சர்க்கஸ் கலைஞன் அரவிந்த்(சூர்யா)தை துரத்துகிறார். சுபாவைக் காதலிக்கும் சூர்யா ஆராய்ச்சிக்காகத்தான் தன்னை துரத்துகிறாள் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான். 

டாங்லீயின் நோக்கம் நிறைவேறியதா?? சுபாவின் ஆராய்ச்சி நிரைவுற்றதா?? அது போக ‘ஆபரேசன் ரெட்’ என்ன ஆயிற்று?? சூர்யாவின் காதல் நிறைவேறியதா??
 இந்த கேள்விக்குறிகளே மீதி சுவாராஸ்யக் கதையாகும்…………………………….அதை கொஞ்சமும் தொய்வில்லாமல் டெம்ப்ளேட் காட்சிகளோடு  செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.அர்.முருகதாஸ்…

 இப்படத்தை தாங்கி நிற்கும் பாத்திரங்கள் டாங்லீ, சுபா, பீட்டர் ஹெய்ன் மட்டுமே…

 சூர்யா---நடிக்க அதிக சான்ஸ் இல்லை. போதிதர்மராகட்டும் சர்க்கஸ் கலைஞனாகட்டும் இரண்டையும் அல்வா மாதிரி சுலபமாக செய்திருக்கிரார்…….

 பல்லவன், போதிதர்மர், டேமோ ஆன போதிதர்மர் என மேக்கப் மற்றும் உடல் மொழி பரவாயில்லை.

 குரங்கு கேட்கவரும் ஸ்ருதியிடம் வழிவது  யானையில் லிஃப்ட் கொடுப்பது காதலி ஏமாற்றினாள் என எண்ணிப் பாடும் ‘யம்மா யம்மா’ பாடலில் காட்டும் முக பாவனைகள் என சில இடங்களில் சூர்யா  இருக்கிறார், ஸ்ருதியை பார்க்க சூர்யா செய்யும் ஃபோன் சேட்டை ரசிக்க வைக்கின்றன. சூர்யாவின் சிக்ஸ் பேக் அதிரடி!!!!

 ஸ்ருதியின் முதல் படம் அட்டகாசமாக அமைந்தது அவருடைய அதிர்ஸ்டமே! கஜினியின் கல்பனாவைப்போல இந்தப் படத்தின் சுபாவும் அனைவரையும் வசீகரிப்பாள். சுபாவின்
project meetingல் தமிழில் பேசப்போய் எல்லோரும் இளக்காரமாகப் பார்க்க கொச்சைத் தமிழில் வக்காலத்து வாங்கிப் பேசும் போது ஒட்டுமொத்த தமிழர்களிடம் கைதட்டல் மூலம் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்…..டூயட் காட்சிகளில் க்யூட்டான ஸ்ருதியைக் காண முடிகிறது. ஜானியை எதிர்க்கும் காட்சிகளில் பயத்தையும் வீரத்தையும் ஒருங்கே காட்ட அவருடைய கண்கள் நன்றாக அவருக்கு உதவுகின்றன.  வட நாட்டு வாசனை வீசாத தமிழ் உச்சரிப்பை சரி செய்தால் போதும்.


ஜானி—பாத்திரத்திற்கேற்ப அருமையான தேர்வு. பேசவேண்டிய வசனங்களை

1 செ.மீ கண்களாலேயே பேசிச் செல்கிறார்…..சண்டைக் காட்சிகளில் spider man அனுபவத்தை உபயோகித்து அதிரடிக்கிறார்! Climax சண்டைக்காட்சியில் ஆணி அடித்ததைப்போல் உட்கார வைக்கிறார்.



Peter hein—சண்டைகாட்சிகளை ஹாலிவுட் தரத்தில் தர மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேசன் ஃபைட், மருத்துவமனை ஃபைட், மவுண்ட்ரோட் ஃபைட், இறுதி ஃபைட் என ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் கலக்கி எடுத்திருக்கிறார். மைண்ட் கண்ட்ரோல் மூலம் மாற்றப்பட்ட சாக்கடைத் தொழிலாளியும், ஒரு பெண்ணும் குஃங்பூ முத்திரை காட்டி சண்டை பொடுவது நல்ல டெக்னிக். இறுதிச் சண்டையில்  இவரே பெரும்பாலும் இப்படத்தை கடத்திச் செல்கிறார்.


ஹாரிஸ் இசையில் யம்மா யம்மாவும், முன்னந்தியும் முணுமுணுக்க வைக்கும். சண்டைக் காட்சியில் இவர் கொடுக்கும் உச்ச பீட்டொன்று தியேட்டரை விட்டு வெலியே வந்த பிறகும் மண்டையைக் குடைகிறது. யாரோ நல்லா இருக்கு என்று சொல்லி இருப்பார்கள் போலிருக்கு.  புண்யவான்.

ரவி கே.சந்திரன்- போதி தர்மர் காலத்திலும்- பாடல் காட்சியிலும் நானும் இருக்கிறேன் என்று தலையைக் காட்டுகிறார்.


முருகதாஸ் மீண்டும் ஒரு கஜினியைப் பொன்றதொரு அனைத்து மொழிக்குமான ஒரு கதையை கொடுக்க முனைந்திருக்கிறார். இது ஒரு இந்தி படத்துக்கான பார்முலாதான். ஒரு மூன்று வருடத்திற்கு இனி கவலை இல்லை. கன்னடம், தெலுங்கு, இந்தி என்று ஒரு ரவுண்டு வந்துவிடுவார். 


பல்லவனையும் சர்க்கஸ்காரானையும் லிங்க் கொடுப்பதுதான் சுவராஸ்யம். நோக்கு வர்மம் என ஒரு சின்ன நாட்டை வைத்து சண்டை காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.  ஆனால் நம்ப முடியவில்லை.

டைரக்டரை ஞாபகப் படுத்தும் சில வசனங்கள்….



மருந்து கண்டுபிடிக்க வெண்டிய விஞ்ஞானிகள் இன்று நோய் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்’


ஐ லவ் யூ-ங்கிறதை ஏதொ இன்னைக்கு இன்னொரு புதன்கிழமை என்கிற மாதிரி சொல்லீட்டுப் போறாடா’


கொரங்கு, யானை, சிங்கம்னு பழகிப் பழகி உன்னொட மனசும் மிருகமாகிப் போனது’


நல்ல விசயம்னா புக்ல தேடு…கெட்ட விசயத்தை குப்பைத் தொட்டியல தெடு’

கடலை சாப்பிட்டுக் கொண்டே அலட்சியமாக பதில் சொல்லும் ஃபாஸ்ட்ரேக் ஊழியரை கொன்றது பின் அதே கடலையை இவர் சாப்பிட்டுக் கொண்டுவருவதும்…ஃபோன் ஒலித்துக் கொண்டிருப்பதும் ரசிக்கலாம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது.  அனால் பொதுவாக எப்போதும் நான் பார்ப்பதில்லை. 
 

தீபாவளியன்று அதிகாலை கண்விழித்து எழுந்துவிட்டோம். பகலெல்லாம் ஆட்டம்…மாலையில் படத்துக்கு போகலாம் என்றால் இரவு பதினோறு மணிக் காட்சிக்குத் தான் டிக்கெட் கிடைத்தது. எனக்கோ பயம். படம் விட எப்படியும் இரவு மணி மூன்றாகி விடும் அதுவரை கண்விழிக்க முடியுமா என்று பயம்தான். ஆனால் படம் முடியும் வரை தூக்கம் வராமல் எல்லோரும் படம் பார்க்கவைத்ததே …..இந்தப் படத்தின் வெற்றிதான்.

ஏழாம் அறிவு- பார்க்கலாம்,  பாதகமில்லை .  எதிர்பார்க்க வைத்தது  கொஞ்சம் ஏமாற்றம்தான்.


 



2 comments :

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......