அஜித் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..ரெட், கிரீடம், ஏகன் என்று பார்த்து நொந்து போய் அஜித் படமே பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். பில்லா பார்த்து கொஞ்சம் நொந்தும் கொஞ்சம் பரவவில்லை என்றும் இருந்தேன்.
ஞாயிறு மங்காத்தா பார்க்க வேண்டிய கட்டாயமாயிற்று.....
ஏற்க்கனவே நிறைய பேர் விமர்சனம் எழுதி கதை எல்லாம் எழுதி விலாவாரியாக எல்லோரும் படித்துவிட்டதினால் நான் கதையைப் பற்றி சொல்லப் போவதில்லை.
படத்தைப் பற்றி...
ஒரு பஞ்ச் வசனம் இல்லை, கைமுட்டிகள் முறுக்குவதில்லை, நரம்பெல்லாம் புடைத்து கண்களெல்லாம் சிவப்பதில்லை -ஒரே ஆச்சர்யம் இது அஜித் படமா என்று!
எந்த ஒரு ஹீரோவும் நடிக்கத் தயங்கும் பாத்திரம். இமேஜ் பார்க்காமல் நடித்திருக்கிறார் அஜித். அதற்கே ஒரு hats off சொல்லலாம். வில்லத்தனமான கேரக்டர்... அல்வா மாதிரி நடித்திருக்கிறார்.
டைட்டில் வித்தியாசமாக இருக்கிறது. இடைவேளை வரை மெதுவாகப் போய் அப்புறம் ஸ்பீட் பட்டையைக் கிளப்புகிறது.
இப்போது கிரிகெட் இந்தியாவுக்கு வேண்டுமானால் சொதப்பலாம்..ஆனால் வெங்கட் பிரபுவுக்கு எப்போதும் அது கை கொடுத்திருக்கிறது. சென்னை-28 , சரோஜா, இப்போ மங்காத்தா.
நிறைய கேரக்டர்கள்... இடைவேளை வரை புதிது புதிதாக நிறைய வருகிறார்கள். திர்ஷா, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா, ஜயபிரகாஷ், மகாத், வைபவ், பிரேம், அரவிந்த்,அஷ்வின் , அர்ஜுன், சுப்பு பஞ்சு, அஞ்சலி, இப்படி இன்னும் நிறைய...ஆனால் இவர்கள் அத்தனை பெரும் படத்தின் பின் பாதியில் வருவதால் அறிமுகம் அவசியமாகிறது. முன்பாதியில் நிறைய சொதப்பல்கள் என்று நாம் நினைப்பதெல்லாம் இறுதியில் அழகாக அவி்ழ்த்துவிடுகிரார்கள்.
நல்ல திரைக்கதை. வெல்டன் வெங்கட்.
தல 50 என்று கேப்சன் கொடுத்துவிட்டதால்தானோ என்னவோ அவ்வப்போது ஒரே பிரேமில் நிறைய அஜித் வருவது மாதிரி ஷாட் வைத்திருக்கிறார்கள். ஒரு பாட்டில் பின்புலங்கள் மாறுவது அழகாக இருக்கிறது. வெங்கட்டும் ஷங்கர் மாதிரி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.
யுவன் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். கவிஞர் அவதாரம் எடுத்து விட்டார். வாழ்த்துக்கள் யுவா. பாட்டுகளும் பரவாயில்லை.
பார்ட்டி , தண்ணி அடிப்பது, காலையில் ஹாங்ஓவர். தண்ணியே அடிப்பதில்லை என்று ஒரு சபதம் எடுப்பது... அனுபவித்து காட்சிபடுத்தி இருக்கிறார் வெங்கட்.
பில்லாவில் முதல் காட்சி. ப்ளைட்டில் இறங்கி வரும் அஜித் படி மேல் நின்று தலையை லெப்ட்-ரைட் திருப்பி ஒரு லுக் விடுவாரே... அதே மாதிரி இதுலயும் ஜீப்பை விட்டு இறங்கி தலையை திருப்பி திருப்பி பார்க்கிறார். தல என்றால் அப்படித்தானோ! அதனால் தன தல என்று பேரோ!
அதென்ன சால்ட் அண்ட் பெப்பர் லுக்கு...இமேஜை உடைக்கனும் என்று கங்கணம் கட்டி வேலை செய்த மாதிரி இருக்கிறது. நாப்பது வயதென்று உண்மை வேறு சொல்கிறாராம். கதைக்கு இது தேவையே இல்லை. அதுவுமில்லாமல் எந்தப் பெண் நாப்பது வயசுக் காரரை லவ் பண்ணுகிறது. அப்படி யாராவது இருந்தா கையை தூக்குங்க. அவ அப்பங்காரன் வந்து கையை வேட்டீருவான் ஜாக்கிரதை.
அஜித் பைக் ரேசில் செய்யத் தவறியதை ஒரு சேசிங் காட்சியில் வீலிங் எல்லாம் பண்ணி அமர்க்களப் படுத்துகிறார். டூப்பா அலது அஜீத்தே தானா என்று தெரியவில்லை.
பிரேம்ஜி பரவாயில்லை. நன்றாகவே செய்திருக்கிறார். எவ்வளவோ செய்திருக்கிறார், இதை செய்ய மாட்டாரா?
மங்காத்தா- மங்காத ஆத்தா!

நீங்க சொல்ரதை பார்த்தா ஒருமுறை படத்தை ப்பாக்கலாம் போலத்தான் இருக்கு.
ReplyDeleteதங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி அம்மா... ரொம்ப சந்தோசமா இருக்கு.
ReplyDelete